This Article is From Feb 08, 2019

'பட்ஜெட் கூட்டத்தொடர் 4 நாட்களுக்கு நடைபெறும்'' - சபாநாயகர் அறிவிப்பு

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

'பட்ஜெட் கூட்டத்தொடர் 4 நாட்களுக்கு நடைபெறும்'' - சபாநாயகர் அறிவிப்பு

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது
  • இன்று காலை தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது
  • வரும் திங்களன்று பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குகிறது

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் 4 நாட்களுக்கு நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். 

அப்துல் கலாம் பெயரில் கல்லூரி, விவசாயிகளுக்கு பயிர்க்கடன், மின்சார பேருந்துகள் இயக்கம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றன. இதனை வரவேற்றும், விமர்சித்தும் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்த விவரங்களை சபாநாயகர் தனபால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-

11-ம்தேதி திங்களன்று பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்குகிறது. 12-ம்தேதி இரண்டாம் நாளும் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். 13-ம்தேதி 3-வது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். அன்றைக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் எல்லாம் பேசி முடித்து விடுவார்கள்.

14-ம்தேதி பட்ஜெட் மீதான விவாதம் குறித்து நிதியமைச்சர் பன்னீர் செல்வம் பதில் அளிப்பார். கூட்டத் தொடர் நடைபெறும் 4 நாட்களும் கேள்வி நேரம் இருக்கும். 

இவ்வாறு சபாநயாகர் தனபால் கூறினார். 

.