This Article is From Jan 31, 2019

முக்கிய விவகாரங்களை விவாதிக்கத் தயார்: பிரதமர் மோடி பேச்சு

பட்ஜெட் தொடர்பான இந்தக் கூட்டத்தில் மொத்தமாக 10 அமர்வுகள் நடைபெறும்

முக்கிய விவகாரங்களை விவாதிக்கத் தயார்: பிரதமர் மோடி பேச்சு

லோக்சபா தேர்தலுக்கு முன்னர் நடைபெறும் கடைசி நாடாளுமன்ற அமர்வு இதுவேயாகும். 

ஹைலைட்ஸ்

  • நாளை தாக்கலாகிறது 2019 இடைக்கால பட்ஜெட்
  • இந்த சூழலில் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார் பிரதமர் மோடி
  • பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள் இருக்க வாய்ப்பு எனத் தகவல்

நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் ஆக உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து விவகாரங்கள் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் விவாதிக்கத் தயாராக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார். 

2019 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் வாக்காளர்களை கவரும் வகையில் அறிவிப்பு இருக்குமா, அல்லது, கடன் மற்றும் மற்ற நிதி சார்ந்த சிக்கல்களை சமாளிக்க திட்டங்கள் அறிவிக்கப்படுமா என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருப்பதனால், மக்களைக் கவரும் வகையில் மோடி தலைமையிலான அரசு சில அறிவிப்புகளை சொல்ல வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது. 

இப்படிப்பட்ட சூழலில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, ‘பட்ஜெட் தொடர்பான நடைமுறைகள் நாடாளுமன்றத்தில் செய்யப்பட்டு வருகின்றன. மொத்த நாடும் நம்மை உற்று கவனித்து வருகிறது. இந்த பட்ஜெட் தொடர்பான அமர்வு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். இந்த அமர்வில் எம்.பி-க்கள் அர்த்தமுள்ள விவதாங்களைச் செய்ய வேண்டும். இது குறித்த அனைத்து விவகாரங்களையும் விவாதிக்கத் தயார்' என்று பேசினார். 

பட்ஜெட் தொடர்பான இந்தக் கூட்டத்தில் மொத்தமாக 10 அமர்வுகள் நடைபெறும். லோக்சபா தேர்தலுக்கு முன்னர் நடைபெறும் கடைசி நாடாளுமன்ற அமர்வு இதுவேயாகும். 


 

.