சுமார் 70 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது.
ஹைலைட்ஸ்
- இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும்
- 70 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது
- மீட்புப்பணிக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்
Raigad (Maharashtra): மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்று சரிந்து விழுந்த விபத்து பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும், 70 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
45 மாடிகள் கொண்டதாக சொல்லப்படும் ஐந்து குடியிருப்புகளில் ஏற்பட்டுள்ள இந்த விபத்தில், மீட்புப்பணிக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மும்பையிலிருந்து விரைந்துள்ளனர்.
“மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்திலுள்ள மகாத் தெஹ்ஸிலின் காஜல்பூரா பகுதியில் நான்கு மாடி அடுக்கு குடியிருப்பு இன்று மாலை 6;45 மணியளவில் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 50க்கும் அதிகமானோர் சிக்கியிருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது. நாங்கள் தேவையான உபகரணங்களுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளோம்” என பேரிடர் மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து காரணமாக சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் புகையால் சூழப்பட்டுள்ளதை விபத்தின்போது எடுத்த படங்களில் காண முடிகின்றது.
இந்த விபத்து குறித்து வருத்தம் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, விரைவான மீட்பு பணி குறித்து பேரிடர் மீட்பு தலைமையிடம் பேசியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மும்பையில் கடந்த மாதம் கனமழையில் சிக்கிய வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் ஒன்பது பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.