বাংলায় পড়ুন Read in English
This Article is From Dec 28, 2018

புலந்த்சார் வன்முறையில் போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் கைது

போலீஸ் அதிகாரியின் துப்பாக்கியை பறித்து அவரை சுட்டுக் கொன்றிருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

Advertisement
இந்தியா Posted by
Bulandshahr:

புலந்த்சார் வன்முறையின்போது போலீஸ் அதிகாரி சுபோத் குமாரை சுட்டுக் கொன்றவரை உத்தர பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாரில் 3 வாரங்களுக்கு முன்பு, பசுவின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக வன்முறை ஏற்பட்டது. பசுவை அடித்துக் கொன்றுவிட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறை செய்தனர்.

சுட்டுக் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி சுபோத் ராய்

இதையடுத்து அவர்களை கட்டுப்படுத்த போலீசார் வந்தனர். அவர்களையும் வன்முறைக் கும்பல் விடாமல் தாக்கியது. ஒருகட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் ராயை சுட்டுக் கொன்ற வன்முறையாளர்கள் அவரை, போலீஸ் வாகனத்தில் ரத்த வெள்ளத்தில் மிதக்க விட்டுச் சென்றனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பிரசாந்த் நாத் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சுபோத் ராயை சுட்டுக் கொன்றது தான்தான் என அவர் வாக்கு மூலம் அளித்திருக்கிறார்.

அவரிடம் உத்தரப்பிரதேச போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் ராணுவத்தை சேர்ந்த ஜிதேந்திர மாலிக் என்பவர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யயப்பட்டார். அவர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.

 

Advertisement
Advertisement