Read in English
This Article is From Jul 26, 2019

''புல்லட் ரயில் திட்டம் 2023 -க்குள் நிறைவேற்றப்படும்'' - மத்திய அரசு தகவல்

ஜப்பான் உதவியுடன் மும்பை - அகமதாபாத் இடையே அதிவேக ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisement
இந்தியா Edited by

திட்டம் நிறைவேற்றப்பட்டால் 500 கி.மீ. தூரத்தை 3 மணி நேரத்தில் கடக்க முடியும்.

New Delhi:

மும்பை - அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டம் 2023-க்குள் நிறைவேற்றப்படும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

வர்த்தக நகரமான மும்பை மற்றும் அகமதாபாத் இடையே பயண நேரத்தை குறைக்கும் வகையில் அதிகவேக ரயில் இயக்கும் திட்டம் ஜப்பானின் உதவியுடன் நடைபெற்று வருகிறது. சுமார் 1.10 லட்சம் கோடி மதிப்பில் இந்த திட்டம் நிறைவேற்றப்படுகிறது. 

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் பயண தூரம் 7 மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக குறையும். மும்பை  - அகமதாபாத் இடையே பயண தூரம் 508 ஆக உள்ளது. இந்த நிலையில் புல்லட் ரயில் திட்டம் 2023 - க்குள் நிறைவேற்றப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அளித்துள்ள பதிலில், 'ஜப்பான் நாட்டின் தொழில்நுட்பம் மற்றும் நிதியுதவியுடன் புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறத. திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ. 1.08 லட்சம் கோடி. தற்போது வரை மொத்தம் ரூ. 3,226.8 கோடி வரை செலவாகியுள்ளது' என்றார். 

Advertisement

புல்லட் ரயில் திட்டம் விரிவுபடுத்தப்படுமா என்று கேட்கப்பட்டதற்கு கோயல் அளித்த பதிலில், 'புல்லட் ரயில் அல்லது அதிவேக ரயில் திட்டம் அதிக முதலீடு, தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை கொண்டு செயல்படுத்தப்படுகிறது. சாத்தியக்கூறுகள், நிதி, பொருளாதாரம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு மற்ற இடங்களில் செயல்படுத்தப்படலாம்' என்றார். 

Advertisement