ஹைலைட்ஸ்
- 11 பேர் இறந்துகிடந்த வீட்டில உபயோகமின்றி 11 பைப் இருந்த வினோதம்
- குடும்பத்தினர் 'கூட்டு பலி'யாக திட்டமிட்டிருக்கலாம்
- வீட்டினுள் இருந்த டைரியை காவல் துறையினர் கைப்பற்றின
New Delhi: டில்லி புராரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரே குடும்பத்க்ச் சேர்ந்த 11 பேர் வீட்டினுள் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உயிரிழப்பிற்கான காரணத்தை வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த காவல் துறையினர், திடிக்கிடும் தகவல்களை சேகரித்து உள்ளனர்.
11 பேர் இறந்துகிடந்த அந்த வீட்டினுள், 11 பைப்புகள் உபயோகம் இன்றி இருப்பது சந்தேகத்தை தூண்டுவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களில் இரண்டு 15 வயது சிறுவர்களும் அடக்கம்.
77வயது நாரயண் தேவி மட்டும் கழுத்து நெரிக்கப்பட்டு தரையில் விழுந்து கிடந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மற்ற பத்து பேரும், சீலிங்கில் தூக்கில் தொங்கியப்படி உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் சிலரது வாய் அடைக்கப்பட்டு, கைகள் கட்டப்பட்டு இருந்தன.
வீட்டினுள் இருந்த டைரியை கைப்பற்றிய காவல் துறையினர், திட்டமிட்டு 11 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தனர். இறப்பதற்கு முன்னர், குடும்பத்தினர் “கூட்டு பலி”யாக திட்டமிட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. ஆன்மிக நம்பிக்கையின் காரணத்திற்காக இத்தகைய செயலில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.