This Article is From Jul 02, 2018

ஒரே வீட்டில் 11 பேர் மரணம்: டெல்லி போலிஸுக்குக் கிடைத்த காகிதக் குறிப்பு!

டெல்லியில் உள்ள புகாரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 7 பெண்கள், 4 ஆண்கள் உட்பட 11 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள விவகாரத்தில் தற்போது டெல்லி போலீஸாருக்கு ஒரு துப்பு கிடைத்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • 'மனித உடல் தற்காலிகமானது'- காகிதக் குறிப்பில் எழுதப்பட்டிருந்தது
  • மதரீதியிலான மூடநம்பிக்கை இந்த சம்பவத்துக்குக் காரணமா என்று போலீஸ் விசாரணை
  • புது டெல்லி புராரி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது
New Delhi:

டெல்லியில் உள்ள புகாரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 7 பெண்கள், 4 ஆண்கள் உட்பட 11 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள விவகாரத்தில் தற்போது டெல்லி போலீஸாருக்கு ஒரு துப்பு கிடைத்துள்ளது.

அவ்வீட்டில் உள்ள 11 பேரும் தூக்கிட்டு உயிரிழந்துள்ளனர். அவர்களின் கண்களும் வாயும் துணியால் கட்டப்பட்டு இருந்துள்ளது. மர்மமான முறையில் 9 பேரின் உடல்கள் வீட்டின் உள்ளே தூக்கில் கண்டறியப்பட்டன. ஒருவர் தோட்டத்தில் இறந்து கிடந்துள்ளார். மற்றொரு வயதான பெண்மணி படுக்கறையில் இறந்து கிடந்துள்ளார்.

burari deaths

டெல்லி போலீஸ் இச்சம்பவத்தை அறிந்து அந்த வீட்டுக்குச் சென்று தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 11 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களுக்குச் சொந்தமாக ஒரு பர்னிச்சர் கடை மற்றும் பலசரக்குக் கடை உள்ளதென்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

இதன் பின்னர் அதிரடி சோதனைகளிலும் விசாரணையிலும் போலீஸார் இறங்கினர். அப்போது பல குறிப்புகள் அடங்கிய காகிதங்கள் அந்த வீட்டிலிருந்து கிடைத்துள்ளன. இது ஒரு பெரிய துப்பு என டெல்லி போலீஸார் கூறியுள்ளனர். மதம் சார்ந்த சில வித்தியசமான மூடநம்பிக்கைகளால் இச்சம்பவம் நடந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மேலும் முதலில் இச்சம்பவம், ஒட்டுமொத்தக் குடும்பத்தின் தற்கொலையாகப் பார்க்கப்பட்டது. ஆனால், வீட்டின் ஒரு நபர் மற்ற 10 பேரையும் தூக்கிலிட்டு கொலை செய்து அந்த 11-வது நபர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும் தற்போது போலீஸார் சந்தேகிப்பதாகக் கூறியுள்ளனர்.

burari deaths

11 பேரில், இரு ஆண்கள், ஆறு பெண்கள், இரண்டு இளம் வயதினர் மற்றும் ஒரு முதிய பெண்மணி வீட்டில் பிணமாகக் கிடந்துள்ளனர். இதில் 77 வயதான பெண்மணி நாரயண தேவி மட்டும் குரல்வளை நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அவர்கள் அறையில் இருந்து ஒரு காகிதத்துண்டில், “மனித உடல் தற்காலிகமானது. இந்த பயத்தைப் போக்க கை, வாயை மூடிக்கொள்ள வேண்டும்” என எழுதப்பட்டிருந்துள்ளது.

இதன் மூலம் அவர்கள் தற்கொலை செய்துகொண்டும் ஏதும் முக்தி அடைய வேண்டும் என்ற மத ரீதியான நம்பிக்கையில் இச்செய்கையைச் செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர். கை, கால்கள், மற்றும் வாய் அனைத்தும் அந்த மத நம்பிக்கை ரீதியில் எழுதப்பட்ட குறிப்பில் இருந்தது போலவே தூக்கிட்ட அத்தனை பேர் உடலிலும் கை, கால், வாய் கட்டப்பட்டு இருந்துள்ளது.

burari deaths

டெல்லி போலீஸார் இச்சம்பவத்தை கொலை வழக்காகவே முதற்கட்ட அறிக்கையில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நிச்சயமாக அனைத்து சந்தேகங்களும் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் தீர்ந்துவிடும் என்றும் கூடுதல் விசாரணையில் உண்மை தெரிய வரும் என்றும் டெல்லி காவல்துறை கூடுதல் ஆணையாளர் அலோக் குமார் தெரிவித்தார்.

 

.