This Article is From Jul 02, 2018

டெல்லியில் ஒரே வீட்டில் 11 பேர் இறந்த சம்பவம்: என்ன சொல்கிறது பிரேத பரிசோதனை?

டெல்லியில் உள்ள புகாரி பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் 7 பெண்கள், 4 ஆண்கள் உட்பட 11 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்

டெல்லியில் ஒரே வீட்டில் 11 பேர் இறந்த சம்பவம்: என்ன சொல்கிறது பிரேத பரிசோதனை?

ஹைலைட்ஸ்

  • டெல்லியின் புராரி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது
  • ஒரு மர்மமான கடிதக் குறிப்பு போலீஸுக்குக் கிடைத்துள்ளது
  • கொலை வழக்காக போலீஸ் இந்த விஷயத்தை விசாரித்து வருகிறது
New Delhi:

டெல்லியில் உள்ள புகாரி பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் 7 பெண்கள், 4 ஆண்கள் உட்பட 11 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள விவகாரத்தில் தற்போது பிரேசப் பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன. அதில் 6 பேர் தூக்ககிட்டு தற்கொலை செய்து கொண்டனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அவ்வீட்டில் உள்ள 11 பேரும் மர்மமான உயிரிழந்துள்ளனர். அவர்களின் கண்களும் வாயும் துணியால் கட்டப்பட்டு இருந்துள்ளது. மர்மமான முறையில் 9 பேரின் உடல்கள் வீட்டின் உள்ளே தூக்கில் கண்டறியப்பட்டன. ஒருவர் தோட்டத்தில் இறந்து கிடந்துள்ளார். மற்றொரு வயதான பெண்மணி படுக்கறையில் இறந்து கிடந்துள்ளார். 11 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களுக்குச் சொந்தமாக ஒரு பர்னிச்சர் கடை மற்றும் பலசரக்குக் கடை உள்ளதென்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

டெல்லி போலீஸ் இச்சம்பவத்தை அறிந்து அந்த வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தியது. கொலை சம்பவமாக இந்த விவகாரத்தை பதவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது போலீஸ். 

போலீஸ் விசாரணையின் போது பல குறிப்புகள் அடங்கிய காகிதங்கள் அந்த வீட்டிலிருந்து கிடைத்துள்ளன. இது ஒரு பெரிய துப்பு என டெல்லி போலீஸார் கூறியுள்ளனர். மதம் சார்ந்த சில வித்தியசமான மூடநம்பிக்கைகளால் இச்சம்பவம் நடந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மேலும் முதலில் இச்சம்பவம், ஒட்டுமொத்தக் குடும்பத்தின் தற்கொலையாகப் பார்க்கப்பட்டது. ஆனால், வீட்டின் ஒரு நபர் மற்ற 10 பேரையும் தூக்கிலிட்டு கொலை செய்து அந்த 11-வது நபர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும் தற்போது போலீஸார் சந்தேகிப்பதாகக் கூறியுள்ளனர். இதனால் தான் கொலை குற்றத்திற்கான வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 

11 பேரில், இரு ஆண்கள், ஆறு பெண்கள், இரண்டு இளம் வயதினர் மற்றும் ஒரு முதிய பெண்மணி வீட்டில் பிணமாகக் கிடந்துள்ளனர். இதில் 77 வயதான பெண்மணி நாரயண தேவி மட்டும் குரல்வளை நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 

வீட்டின் அறையில் இருந்து ஒரு காகிதத்துண்டில், “மனித உடல் தற்காலிகமானது. இந்த பயத்தைப் போக்க கை, வாயை மூடிக்கொள்ள வேண்டும்” என எழுதப்பட்டிருந்துள்ளது.

இதன் மூலம் அவர்கள் தற்கொலை செய்துகொண்டும் ஏதும் முக்தி அடைய வேண்டும் என்ற மத ரீதியான நம்பிக்கையில் இச்செய்கையைச் செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர். கை, கால்கள், மற்றும் வாய் அனைத்தும் அந்த மத நம்பிக்கை ரீதியில் எழுதப்பட்ட குறிப்பில் இருந்தது போலவே இருந்துள்ளது.

இறந்தவர்கள் பாட்டிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடுக்கிடும் சம்பவம் குறித்து குடும்ப அங்கத்தினரான சுஜாதா பாட்டியா, 'எனது குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை. அவர்கள் அனைவரும் மிக மகிழ்ச்சியாக இருந்தனர். யாரோ என் குடும்பத்தினரை கொலை செய்துள்ளனர் போலீஸ் அவர்களை கண்டுபிடிக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தான் 6 பேரின் பிரேத பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன. அதில், அவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.

.