This Article is From Jul 06, 2018

பறவைக்கு தீ பிடித்ததால் 17 ஏக்கர் நிலம் கருகி நாசம்

நெருப்பு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதால் மக்களுக்கு ஆபத்தில்லை என்று உள்ளூர் தீ அணைப்பு துறை கூறியுள்ளது

பறவைக்கு தீ பிடித்ததால் 17 ஏக்கர் நிலம் கருகி நாசம்

ஜெர்மனியில் உயர் அழுத்த மின்சார கேபிலில் உரசி, தீப் பிடித்தபடி பறவை ஒன்று கீழே விழுந்தது. அந்த பறவையின் நெருப்பில் இருந்து தீ பறவி 17 ஏக்கர் நிலத்தை எரித்தது.

இந்த சம்பவம் ரோஸ்டாக் என்ற கடற்கரை நகரத்தில் நடைபெற்றது. உள்ளூர் தீயணைப்பு துறையின் அறிக்கையின் படி, தீ முதலில் உலர் நிலத்தில் தொடங்கி பின்பு வேகமாக அருகில் இருந்த இரயில் மின் இணைப்புகளில் பரவியது. ரிக்டாஹல் மற்றும் கோஸ்டெர்பெக் ஆகிய குடியிருப்பு பகுதிகளுக்கு காற்றும், தீயை பரப்பத் தொடங்கியது. தீயை கட்டுப்படுத்த ஹெலிகாப்டரும், 50 தீயணைப்பு வீரர்கள் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் 7 ஹெக்டேர் நிலம் தீயில் அழிந்தது. இருப்பினும், நெருப்பு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதால் மக்களுக்கு ஆபத்தில்லை என்று உள்ளூர் தீ அணைப்பு துறை கூறியுள்ளது.
 

 
 

சொத்து சேதத்தின் அளவு இன்னும் தெளிவாக இல்லை என்றாலும், சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.

இதுப்போல் விநோதமாக தீப்பிடிப்பது முதல் முறை அல்ல,இந்த ஆண்டு மார்ச் மாதம், இத்தாலியில் மூன்று அமெரிக்க மாணவர்கள் தண்ணீர் இல்லாமல் பாஸ்தா சமைக்க முயற்சி செய்ய தீ ஏற்பட்டு அவர்களின் அபார்ட்மெண்டை தீப்பிடித்து எரிந்தது குறிப்பிடத்தக்கது.

Click for more trending news


.