This Article is From Mar 06, 2020

லைசென்ஸ் வாங்கிய 10 நிமிடத்தில் காரை பறக்க விட்ட ஓட்டுநர்!!

பாலத்திற்கு நடுவே கார் சென்றுகொண்டிருந்த போது ஓட்டுநர் தனது போனில் வந்த வாழ்த்து செய்தியைப் பார்த்துக்கொண்டிருந்துள்ளார்.

லைசென்ஸ் வாங்கிய 10 நிமிடத்தில் காரை பறக்க விட்ட ஓட்டுநர்!!

சீனாவில் ஓட்டுநர் ஒருவர் ஆற்றுக்குள் காரை விட்ட காட்சிகள்.

ஹைலைட்ஸ்

  • லைசென்ஸ் வாங்கிய 10 நிமிடத்தில் காரை பறக்க விட்ட ஓட்டுநர்
  • விபத்து குறித்த புகைப்படத்தை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ளனர்.
  • செல்போனை பார்த்த படி காரை ஓட்டியதால் விபத்து

சீனாவில், ஓட்டுநர் தேர்வில் தேர்வான பத்தே நிமிடங்களில் அந்த ஓட்டுநர் காரை ஆற்றுக்குள் விட்ட அரிதான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவரது பெயர் ஜீகாங் என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இந்த விபத்து நடந்த போது, அந்த ஓட்டுநர் தனது போனில் வந்த வாழ்த்து செய்தியைப் பார்த்துக்கொண்டிருந்துள்ளார் என்று தெரிகிறது. 

இதுதொடர்பாக டெய்லி மெயில் அளித்துள்ள தகவலின்படி, கடந்த பிப்.21ம் தேதி சீனாவில் சுன்யி பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாகப் புகைப்படங்களை சமூகவலைத்தளமான வெய்போவில் சுன்யி போக்குவரத்து காவல்துறையினர் பகிர்ந்துள்ளனர். மேலும், அதில், 10 நிமிடங்களுக்கு முன்பு தான் அந்த கார் உரிமையாளர் லைசென்ஸ் வாங்கினார் என்றும் குறிப்பிட்டுள்ளனர். 

தொடர்ந்து, பாக்ஸ் நியூஸூக்கு ஜீகாங் அளித்த பேட்டியில், நான் காரை ஓட்டிக்கொண்டிருந்த போது, எனது போனில் வந்த குறுஞ்செய்திகளைப் படிக்க முயற்சி செய்தேன். அப்போது, எனக்கு முன்பாக பாலத்தில் இரண்டு பேர் இருந்தனர். அதனால், பதற்றமடைந்த நான் உடனடியாக வண்டியை இடது பக்கமாகத் திருப்பினேன். இந்த விபத்து நடப்பதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு தான் லைசென்ஸ் வாங்கி வந்தேன் என்றார். . 

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஜீகாங் உயிர்தப்பித்துள்ளார். அவர் கார் கதவை உதைத்ததும், கதவுகள் திறந்துள்ளன. இதைத்தொடர்ந்து, கிரேன் உதவியுடன் அவரும் அவரது காரும் மீட்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் அவரது தோள்பட்டை பகுதி லேசாகக் கீழ் இறங்கியுள்ளது. 

ftm3hdes

Photo Credit: சுன்யி போக்குவரத்து காவல்துறையினர்

தொடர்ந்து, போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதுபோன்ற கவனக்குறைவால் ஓட்டுநர் விபத்துக்குள்ளாவது இது முதன்முறையல்ல. கடந்த 2017ம் ஆண்டில் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் செல்போன் பேசிய படி சென்றபோது, ஒரு குறுகிய பள்ளத்திற்கு வண்டியுடன் விழுந்துள்ளார்.

Click for more trending news


.