Read in English
This Article is From Dec 24, 2019

CAA-க்கு எதிராக போராட்டம் நடத்திய ஸ்டாலின் உள்பட 8 ஆயிரம்பேர் மீது வழக்குப்பதிவு!!

போலீசாரின் அனுமதியின்றி குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நேற்று போராட்டம் நடத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 8 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement
இந்தியா

திமுக தலைமையில் நேற்று ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர்.

Chennai, Tamil Nadu:

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நேற்று திமுக தலைமையில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெற்றது. அனுமதி மறுக்கப்பட்டதை மீறி இந்த போராட்டம் நடைபெற்றதால் அதில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட 8 ஆயிரம் பேர் மீது சென்னை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், 'போலீசாரின் அனுமதியின்றி குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நேற்று போராட்டம் நடத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 8 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர்' என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக சென்னையில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சியினர் இந்த போராட்டத்தில் பங்கெடுத்தனர். 

Advertisement

போலீசார் அனுமதி அளிக்காத இந்த போராட்டத்தில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கனிமொழி, வைகோ உள்ளிட்டோரும், எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். 

அரசியல் தலைவர்களை தவிர்த்து அதிக எண்ணிக்கையில் விவசாயிகள், வர்த்தகர்களும் அமைதியான முறையில் நேற்று போராட்டத்தில் பங்கேற்றனர்.

Advertisement

இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 5 ஆயிரம் போலீசார், கலவர தடுப்பு வாகனங்கள் உள்ளிட்டவை சட்டம் ஒழுங்கை காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. 
'

Advertisement