This Article is From Jan 07, 2020

மோடிதான் பாஸ், அவர் சொல்வதை கேட்டு செயல்படுங்கள் : பாஜக ஹர்தீப் சிங்

CAA Protests: சிஏஏ -பற்றி முதலில் நினைவு கொள்ள வேண்டிய முதல் முக்கியமான விஷயம் என்னவென்றால் அது யாருக்கும் பாகுபாடு காட்டாது. அது யாருடைய உரிமைகளையும் பறிப்பதில்லை.

என்.ஆர்.சி குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

New Delhi:

மத்திய சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நாட்டில் சிறுபான்மையினர் குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் பயப்பட ஏதுமில்லை என்றும் நடந்து வரும் ஆர்ப்பாட்டங்கள் பயமுறுத்தல் என்று கூறியுள்ளார். 

சர்ச்சைக்குரிய சட்டத்தை தேசிய குடிமக்கள் பதிவேட்டுடன் இணைக்கப்போவதில்லை என்றும் நாடு முழுவதும் செயல்படுத்த எந்த திட்டமும் இல்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவற்றில் ஒரு தவறான விளக்கம் கொடுக்கப்பட்டு வருகிறது என்று எண்டிடிவிக்கு தெரிவித்தார்.

அண்டை நாடுகளான பாகிஸ்தான் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து துன்புறுத்தப்பட்ட மத சிறுபான்மையினருக்கு அடைக்கலம் அளிப்பதற்காக மட்டுமே இந்த சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். 

திருத்தப்பட்ட சட்டம் என்.ஆர்.சியுடன் செயல்படுத்தப்படும்போது, நாட்டின் முஸ்லீம் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்ற கூற்றினை மத்திய அமைச்சர் நிராகரித்தார். “சிஏஏ -பற்றி முதலில் நினைவு கொள்ள வேண்டிய முதல் முக்கியமான விஷயம் என்னவென்றால் அது யாருக்கும் பாகுபாடு காட்டாது. அது யாருடைய உரிமைகளையும் பறிப்பதில்லை. அதை என்.ஆர்.சி உடன் இணைப்பதன் மூலம் மக்களிடம் அச்சத்தை உருவாக்கியுள்ளனர்” என்று அவர் கூறினார்.

என்.ஆர்.சி குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். “நீங்கள் பிரதமரை நம்பலாம், ஏனெனில் அவர்தான் பாஸ்” என்றும் கூறியுள்ளார்.


குடியுரிமை திருத்த சட்டம் முதன்முறையாக, மதத்தை இந்தியாவின் குடியுரிமையின் தகுதியாக மாற்றுகிறது. மூன்று முஸ்லீம் ஆதிக்க நாடுகளிலிருந்து வரும் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு குடியுரிமை பெற இது உதவும் என்று அரசாங்கம் கூறினாலும் விமர்சகர்கள் இது அரசியலமைப்பின் மதச்சார்பற்ற கொள்கைகளை மீறுவதாக கூறுகின்றனர்.

ஹர்தீப் சிங் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த தாக்குதலைக் கண்டித்தார். ஆனால், “சரியாக என்ன நடந்தது” என்பதில் சில தெளிவற்ற தன்மை இருப்பதாகக் கூறினார். “அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் நேற்று மாலை நடந்த சம்பவத்தை காட்டியது. ஆனால் சிறிது காலமாகவே அங்கு பிரச்னை உருவாகிவருகிறது” என்று அவர் தெரிவித்தார். 

டெல்லி காவல்துறை செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டினை நிராகரித்தவர். “காவல்துறை மிகவும் கடுமையான சூழலில் சிக்கியுள்ளது. அவர்கள் ஒரு வளாகத்திற்குள் சென்று வன்முறை நடந்தால் காவல்துறையை குறை கூறுகிறீர்கள், ஆனால் இங்கே காவல்துறை நுழையவில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள்...” என்று கடந்த மாதம் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் நகர காவல்துறையின் ஒடுக்குமுறை குறித்து பேசினார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் நிலைமை பெரும்பாலான மக்கள் புரிந்துகொள்ளக்கூடியதை விட "சிக்கலானது" என்று மத்திய அமைச்சர் கூறினார். "ஜே.என்.யூ மாணவர் சங்கத் தலைவர் ஒரு கும்பலை வழிநடத்துவதை நான் கண்டிருக்கிறேன். அதற்கு நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?" அவர் கூறினார்.

.