CAA Protests: எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்களை பல்கலைக்கழகத்தின் மூலம் நடவடிக்கை எடுப்பதற்கும் மத்திய அரசினை கடுமையாக சாடியுள்ளார். (PTI File)
Naihati, West Bengal: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தான் உயிருடன் இருக்கும் வரை குடியுரிமை திருத்த சட்டம் மேற்கு வங்கத்தில் செயல்படுத்தப்படாது என்று தெரிவித்துள்ளார்.
மக்களின் அடிப்படை உரிமைகளுள் ஒன்றான குடியுரிமையை யாரும் பறிக்க முடியாது என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மேற்கு வங்கத்தின் நைஹாட்டியில் நடந்த நிகழ்வில் பேசியுள்ளார்.
சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்தார் மம்தா பானர்ஜி. 18 வயதை அடைந்தவர்கள் வாக்களிக்க முடியும் ஆனால் போராடுவதற்கு உரிமை இல்லையா…? என்று ஆச்சரியத்துடன் கேள்வியும் எழுப்பினார்.
“நான் உயிருடன் இருக்கும் வரை சி.ஏ.ஏ வங்காளத்தில் செயல்படுத்தப்படாது. யாரும் நாட்டைவிட்டோ அல்லது மாநிலத்தை விட்டோ வெளியேற வேண்டியதில்லை. வங்களாத்தில் எந்த தடுப்புகாவல் முகாமும் இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.
“ஒரு கடுமையான சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது? எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்களை பல்கலைக்கழகத்தின் மூலம் நடவடிக்கை எடுப்பதற்கும் மத்திய அரசினை கடுமையாக சாடியுள்ளார்.