இந்துகள் அரசியலை தாண்டி உயரவேண்டும் - சுரேஷ் பையாஜி (File photo)
Panaji: பாஜகவை எதிர்ப்பது என்பது இந்துக்களை எதிர்ப்பதாகாது என ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார்.
பானாஜி அருகே நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட சுரேஷ் பையாஜி ஜோஷி பேசியதாவது, பாஜகவுக்கு எதிரான எதிர்ப்பை இந்துக்களுக்கு எதிரான எதிர்ப்பாக நாம் கருதக்கூடாது. இது ஒரு அரசியல் போராட்டம் அது தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். அதனால், அதனை இந்துக்களுடன் இணைக்கக்கூடாது என்றார்.
குழப்பம் இருக்கும் இடத்தில், சுயநல நடத்தை உள்ளவர்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது. விவேகானந்தரின் இந்துத்துவா நல்லது என்றும் விநாயக் சாவர்க்கர் அதுபோல் அல்ல என்றும் சிலர் கூறுகின்றனர். இத்தகைய கூற்றுக்கு என்ன அடிப்படை?
மேற்குவங்கத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்கள் தாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று கூறுகின்றனர். ஆனால், துர்கா பூஜை மண்டலங்களுக்கு தலைமை தாங்கும் போது அவர்கள் எப்போதும் முன்னணியில் இருப்பார்கள். கம்யூனிஸ்ட்டுகள் கோயில் கமிட்டியின் தலைவராக இருக்க விரும்பும் கேரளாவின் நிலைமையும் இதுதான்.
இந்துகள் அரசியலை தாண்டி உயரவேண்டும். ஆர்எஸ்எஸ் அனைவருக்கும் பதவிகளை வழங்கியுள்ளது. யார் ஆர்எஸ்எஸ்-ல் இணைய விரும்புகிறார்களோ அவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். இந்துக்கள் அல்லாதவர்கள் ஆர்எஸ்எஸ்-ல் சேருவதை நாங்கள் ஒருபோதும் தடுத்து நிறுத்தவில்லை.
நாங்கள் இந்துக்கள் மீது கவனம் செலுத்துகிறோம் என்பது உண்மைதான். ஆனால், கிறிஸ்துவம், முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த ஒருவர் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்துடன் உடன்பட்டால் அவர்களும் அதில் சேர்ந்துக்கொள்ளலாம். சேர்ந்த பிறகு அவர்கள் 'பாரத் மாதா கி ஜெய்' என்று கூற தயங்கினால், நீங்கள் தேசத்தை உங்கள் தாயாக கருதவில்லை என்று தான் நாங்கள் கூறுவோம். அதனால், நீங்கள் இங்கே இருக்க தகுதியற்றவர்.
உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் முஸ்லீம்களும் ஆர்எஸ்எஸ்-ல் இணைந்துள்ளனர். இந்துக்கள் அல்லாதவர்கள் ஆர்எஸ்எஸ்-ல் இணைந்தாலும், இந்துக்களுக்கு என்னென்ன பதவிகள் வழங்குவோமோ, அவை அனைத்தையும், அவர்களுக்கும் வழங்குவோம் என்றார்.
மேலும் கூறும்போது, அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ்-ல் சேர எந்த தடையும் விதிக்கப்படவில்லை, எனினும் அவர்கள் அரசியல் இயக்கங்களின் ஒரு பகுதியாக இணைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.