বাংলায় পড়ুন Read in English
This Article is From Jul 29, 2020

புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

கொள்கை வரைவு அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயர் கல்வி அமைச்சகம் என மறுபெயரிடப்பட்டுள்ளது என மத்திய உயர் கல்வித்துறை செயலர் அமித் சுரே செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Advertisement
இந்தியா

புதிய கல்விக் கொள்கை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Highlights

  • புதிய கல்விக் கொள்கை வரைவு 2020
  • மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
  • கல்வி அமைச்சகம் என மறுபெயரிடப்பட்டுள்ளது
New Delhi:

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய புதிய கல்விக் கொள்கை வரைவு 2020க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் பெயரை கல்வித்துறை என பெயர் மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் கே கஸ்துரிரங்கன் தலைமையிலான குழு கடந்த ஆண்டு புதிய கல்விக் கொள்கை குறித்த அறிக்கையை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியாலுக்கு சமர்ப்பித்தது.

பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துக்களைப் பெறுவதற்காக இந்த வரைவு பொது களத்தில் வைக்கப்பட்டது, மேலும் இது குறித்து இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகள் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் பெறப்பட்டன.

இந்நிலையில் கொள்கை வரைவு அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயர் கல்வி அமைச்சகம் என மறுபெயரிடப்பட்டுள்ளது என மத்திய உயர் கல்வித்துறை செயலர் அமித் சுரே செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement