Read in English
This Article is From Mar 08, 2019

நிதித்துறை செயலராக சுபாஷ் சந்திர கார்க் நியமனம்: மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை குழு நிதித்துறை செயலரை தேர்வு செய்திருக்கிறது.

Advertisement
இந்தியா Edited by

ராஜஸ்தானை சேர்ந்த 1983-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். கேடர் சுபாஷ் சந்திர கார்க்.

New Delhi:

மத்திய நிதித்துறை செயலராக சுபாஷ் சந்திர கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புதிய நிதித்துறை  செயலர் குறித்த உத்தரவை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதற்கு முன்பாக பொருளாதார விவகார செயலராக சுபாஷ் சந்திர கார்க் இருந்தார்.

58 வயதாகும் சுபாஷ் சந்திர கார்க் ராஜஸ்தானின் 1983-ம் ஆண்டு பிரிவு அதிகாரி ஆவார். அவர் கடந்த 2017 ஜூன் மாதத்தில் இருந்து பொருளாதார விவகாரங்களுக்கான செயலராக இருந்து வருகிறார். 

நிதித்துறை செயலராக இருந்த அஜய் நாராயணனின் பதவிக் காலம் பிப்ரவரி 28-ம்தேதியுடன் நிறைவு பெற்றது. தற்போது அஜய் நாராயண் 15-வது நிதிக் கமிஷன் உறுப்பினராக உள்ளார். 

Advertisement
Advertisement