தமிழகத்தில் அரசு கேபிள் டிவி கட்டணம் உயராது என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது-
இந்தியாவிலேயே அரசு கேபிளுக்கு டிஜிட்டல் உரிமை பெற்ற மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. அதன் மூலமாகத்தான் அதிகமான சேனல்களை மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் அளித்து வர முடிகிறது.
இது எந்த மாநிலத்திலும் செய்யப்படாத சாதனையாக உள்ளது. கேபிள் டிவி கட்டணத்தை அதிகப்படுத்தாத நிலையில் மக்களுக்கு சேவை செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.