Read in English
This Article is From Jul 03, 2018

பெண்களுக்கு கால் டாக்ஸி பாதுகாப்பல்ல: பெண்கள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி

டாக்ஸி சேவை நிறுவனங்கள் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்

Advertisement
இந்தியா
New Delhi:

புது டில்லி: டாக்ஸி சேவை நிறுவனங்கள் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா காந்தி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதியுள்ளார். தொடர்ச்சியாக டாக்ஸி ஓட்டுநர்கள் பெண் பயணிகளிடம் தவறாக நடந்துகொள்வதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, திங்களன்று மேனகா காந்தி அவர்கள் இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் படி, டாக்ஸி நிறுவனங்கள் பல்வேறு கட்ட கூட்டங்கள், ஆலோசனைகளுக்குப் பிறகும் வாகன ஓட்டுநர்களுக்கான போலீஸ் சரிபார்ப்பு போன்ற வழிகாட்டுதல்களில் கொடுக்கப்பட்டுள்ள எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கடைபிடிக்கவில்லை,

பெங்களூருவில், சமீபத்தில் ஓலா கேப் ஓட்டுநர், பெண் பயணி ஒருவரை வாகனத்திலே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதையடுத்து இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மேனகா காந்தி டாக்ஸிகளில் பயணிக்கும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தேவைப்பற்றி பேசியுள்ளார், மேலும் ஷேர் ரைடுகளில் பெண்கள் தங்களுக்கான சக பயணியை தேர்ந்தெடுக்கும் வசதியை பற்றிய யோசனையையும் முன்மொழிந்துள்ளார்,

ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்தின் படி, அமைச்சகத்தில் இருந்து சில அதிகாரிகள் ஓலா மற்றும் ஊபெர் நிறுவனத்தின் பிரதிநிதிகளை சந்தித்துள்ளார். எனினும் ஒரு மூத்த அதிகாரி கூறிய தகவலின் படி, இந்த சந்திப்பு சுமூகமானதாக அமையவில்லை தெரிகிறது.

"டாக்ஸ் சேவைகளின் இயக்கத்தில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. பயணத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதைப் பற்றி ஆராய்ந்து வருகிறோம், விரைவில் இதற்கான யோசனைகள் முன்மொழியப்படும்" என ஒரு அதிகாரி ஐஏஎன்எஸிடம் கூறியுள்ளார்.

Advertisement