বাংলায় পড়ুন Read in English
This Article is From Nov 06, 2019

உணவகத்திற்கு வந்த 2 வயது குழந்தையை அவமானப்படுத்திய பணியாளர் : மன்னிப்பு கேட்ட நிர்வாகம்

என் குழந்தை யாரையும் பயமுறுத்தியது இல்லை. எந்தவொரு பிரச்சினையும் செய்யவில்லை. இன்று பணிபுரியும் ஊழியர்கள் கூட என் குழந்தையை இனிமையானவள் என்று பாராட்டியிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

Advertisement
விசித்திரம் Edited by

கஃபே சுப்ரீம் கிம்பர்லியிடம் மன்னிப்பு கேட்டு, உணவுக்கான முழு கட்டணத்தையும் திரும்ப செலுத்தியுள்ளது.

நியூசிலாந்தில் பெண்ணொருவர் உணவகம் தன்னையும் தன் குழந்தையும் அவமானபடுத்தப்பட்டதாக ஃபேஸ்புக் பக்கத்தில் புகார் தெரிவித்துள்ளார். 

கிம்பர்லி ஷே என்ற பெண் தன் குடும்பத்துடன் கஃபே சுப்ரீம் என்ற உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு வழக்கத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த கிம்பர்லி ரசீதை கேட்டார். உணவகத்தின் பணியாளர் அந்த ரசீதில் ‘பயமுறுத்தும் குழந்தையின் குடும்பம்' என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த குறிப்பு தன்னையும் தன் குழந்தையும் அவமானப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார். அவதூறான கருத்தினை தெரிவித்தற்கும் உணவுக்காக அதிக கட்டணம் வசூலித்த உணவகம் குறித்த புகாரின் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

“உங்களின் உணவகத்திற்கு வந்ததற்கு கூடுதல் கட்டணம் வசூலித்து வேண்டுமென்றே ‘பயமுறுத்தும் குழந்தையின் குடும்பம்' என்று தெரிவிப்பதுதா உங்கள் வழக்காம…! நல்ல செயல்” என்று அவர் கூறியுள்ளார்.

Advertisement

என் குழந்தை யாரையும் பயமுறுத்தியது இல்லை. எந்தவொரு பிரச்சினையும் செய்யவில்லை. இன்று பணிபுரியும் ஊழியர்கள் கூட என்  குழந்தையை இனிமையானவள் என்று பாராட்டியிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார். 

இந்த சம்பவத்தை தொடர்ந்து கஃபே சுப்ரீம் கிம்பர்லியிடம் மன்னிப்பு கேட்டு, உணவுக்கான முழு கட்டணத்தையும் திரும்ப செலுத்தியுள்ளது. மேலும் அந்த ஊழியரையும் விடுப்பில் அனுப்பி விட்டதாக தெரிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement