This Article is From Jul 10, 2018

2015 சென்னை வெள்ளத்திற்கு சி.எம்.டி.ஏ அலட்சியமே காரணம்: சி.ஏ.ஜி

2015 டிசம்பர் வெள்ளத்திற்கு காரணம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ) தனது திட்டங்களில் தோல்வி அடைந்ததே காரண்ம் என்று சி.ஏ.ஜி தெரிவித்துள்ளது

2015 சென்னை வெள்ளத்திற்கு சி.எம்.டி.ஏ அலட்சியமே காரணம்: சி.ஏ.ஜி

சென்னை, ஜூலை 9 (PTI) 2015 டிசம்பர் வெள்ளத்திற்கு காரணம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ) தனது திட்டங்களில் தோல்வி அடைந்ததே காரண்ம் என்று சி.ஏ.ஜி தெரிவித்துள்ளது. நீர் வழிப்பாதையை கட்டிடங்கள் ஆக்கிரமிப்பு செய்வது தடுக்க தவறி விட்டதாகவும், விவசாய நிலங்களை அரசின் அனுமதியின்றி கட்டிடங்களாக மாற்றுவதையும் தடுக்கவில்லை எனவும் சி.ஏ.ஜி குற்றம் சாட்டியுள்ளது.

பெரு தொழில் நிறுவனங்கள், நீர் வழி பகுதிகளில் தொழிற்சாலைகளை அமைத்துள்ளதை கண்டுகொள்ளாமல் விட்டதால் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் தொழிற்சாலை நிலங்களாக மாறியது தான் வெள்ளத்திற்கு காரணம் என்று கூறுகிறது சி.ஏ.ஜி. ஆய்வில் தமிழகத்தில் நிலங்களையும் நீரிருப்பு பகுதிகளை பாதுகாக்க சட்டம் சரியாக இல்லை என்றும் நீர் தேக்கங்களை புதுப்பிக்கும் பணிகள் சரியாக நடக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது சி.ஏ.ஜி.

டிசம்பர் வெள்ளத்தால் 289 உயிர்கள் பலியாகி உள்ளது, 23.25 லட்சம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. தமிழ்நாட்டில் ஆக்கிரமிப்பு சட்டம் இருந்தும் ஒவொரு வருடமும் ஆக்கிரமிப்பு அதிகமாகி கொண்டே போகிறது. ஆக்கிரமிப்பு மற்றும் பல துறைகளின் ஒத்துழைப்பு இல்லாததால் ஜவஹர்லால் நேரு தேசிய நகர சீரமைப்பு திட்டத்தின் கீழ் கொண்டு வந்த எட்டு திட்டங்களும் நிறைவடையவில்லை. கழிவு நீர் வடிகாலும் சரியாக இல்லாததாலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதை பற்றிய சட்டங்கள் தெளிவாக பின்பற்றப்பட வேண்டும். சி.எம்.டி.ஏ நீர்நிலைகளில் முறையான ஆய்வுகள் இல்லாமல் தொழிற்சாலை அமைக்க அனுமதிக்க கூடாது என்றும் சி.ஏ.ஜி அறிவுறுத்தியுள்ளது. அரசாங்க தகவல்படி சென்னை வெள்ளத்துக்கு பின் அடையாறு ஆறு மற்றும் கூவம் ஆற்றின் கரையோரம் வசித்து வந்த 4,531 குடும்பங்களை வெளியேற்றி உள்ளனர். 2016-17 ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சி 292 கி.மீ தூர கழிவு நீர் வடிகால் திட்டத்திற்கு 463 கோடி ரூபாய் நீதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் 159 சதவீதம் அதிகரித்துள்ளது.



(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)

.