Read in English
This Article is From Nov 22, 2019

கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை படிவத்தில் ’மூன்றாம் பாலினம்’ சேர்ப்பு

பல்வேறு உதவித்தொகை மற்றும் ஃபெல்லோ ஷிப்களில் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக சேர்க்க வேண்டும் என்று பல்கலைக் கழக மானியம் அழைப்பு விடுத்ததையடுத்து இந்த விருப்பம் சேர்க்கப்பட்டுள்ளது.

Advertisement
இந்தியா Edited by

Calcutta University introduces third gender option in admission forms

Kolkata:

கொல்கத்தா பல்கலைக்கழகம் சேர்க்கை படிவத்தில் ‘மூன்றாம் பாலினம்' என்ற பிரிவினை சேர்த்துள்ளதாக துணைவேந்தர் சோனாலி சக்ரவர்த்தி பானர்ஜி தெரிவித்தார். இளங்கலை மற்றும் முதுகலை படிப்பிற்கான சேர்க்கை படிவங்களில் பாலினம் குறித்த கேள்வியில் ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம் என்று 3விருப்பங்கள் இருக்குமென தெரிவித்துள்ளது. 

பல்வேறு உதவித்தொகை மற்றும் ஃபெல்லோ ஷிப்களில் திருநங்கைகளை  மூன்றாம் பாலினமாக சேர்க்க வேண்டும் என்று பல்கலைக் கழக மானியம் அழைப்பு விடுத்ததையடுத்து இந்த விருப்பம் சேர்க்கப்பட்டுள்ளது. 

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி யூஜிசியின் பல்வேறு உதவித்தொகை/ ஃபெல்லோஷிப் ஆகிய திட்டங்களின் கீழ் திருநங்கைகள் மூன்றாம் பாலினமாக சேர்க்கப்படுவார்கள் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

ஒருவரின் பாலின அடிப்படையில் உயர்கல்வி வசதிகளில் எந்தவிதமான பாகுபாடும் இருக்கக்கூடாது என்று சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். 

Advertisement



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement