அவர் அந்த பாருக்கு தன் சிறு வயதில் இருந்தே வருவதாகவும், அங்கு வருபவர்கள் அனைவரும் தன்னுடைய குடும்பத்தார் போலவும் என்று மேட் வென்னர்ஸ்ரோம் கூறியுள்ளார்
கலிபோர்னியா, தௌசண்ட் ஓக்ஸ் பகுதியில் இருக்கும் ஒரு பாரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அந்தத் துப்பாக்கிச் சூட்டில் தப்பித்தவர்கள், தங்களுக்கு நடந்தவற்றை சொல்லத் தொடங்கியுள்ளனர்.
அந்தப் பாரின் கஸ்டமரான மேட் வென்னர்ஸ்ரோம் (20), நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். துப்பாக்கிச் சூடு தொடங்கியதும், அங்கிருப்பவர்களைப் பத்திரமான இடத்துக்கு செல்லும்படி வலியுறுத்தினார்.
"நாங்கள் ஒரு சிலர் நீச்சல் குளத்தின் அருகே நின்றிருந்தோம். பின்னர், எங்கள் அருகில் இருந்த அனைவரையும் ஒருங்கிணைத்து, அந்த மேஜை அருகில் வர வைத்தோம்"என்று வென்னர்ஸ்ரோம் ஏபிசி ஊடகத்துக்கு தெரிவித்தார்.
துப்பாக்கியில் தோட்டாக்கள் தீர்ந்திருந்த சமயத்தில், யாரோ பாரில் இருக்கும் நபர் நாற்காலியை எடுத்து கண்ணாடி உடைத்ததைப் பார்த்த வென்னர்ஸ்ரோம், தானும் அதேபோல் செய்து கண்ணாடிகளை உடைத்துள்ளார். " பார் கண்ணாடிகளை மேஜை கொண்டு உடைப்பது எளிதாக இருந்தது" என்று அவர் கூறியுள்ளார்.
உடைந்த கண்ணாடிகளை அகற்றி உள்ளே இருந்த 30 அல்லது 35 பேரை வெளியில் செல்ல உதவியுள்ளார்.
"நாங்கள் ஒரு இடத்தில் நின்றுக் கொண்டு, எத்தனை பேரை வெளியில் அனுப்ப முடியுமோ, அனுப்பி கொண்டிருந்தோம். எல்லோரையும் அனுப்பிய பிறகு நாங்களும் வெளியில் குதித்தோம்" என்றார்.
அவர் அந்த பாருக்கு தன் சிறு வயதில் இருந்தே வருவதாகவும், அங்கு வருபவர்கள் அனைவரும் தன்னுடைய குடும்பத்தார் போலவும் என்று சிபிஎஸ் ஊடகத்தில் கூறியுள்ளார்.
"10, 15 வருடங்களாக இங்கு இங்கு வருகிறேன். அதனால், என்னுடைய நண்பர்களைக் காப்பாற்ற என்னால் முடிந்த அளவுக்கு உதவினேன்" என்றார்.
சமூக வலைத்தளங்களில் பலரும் அவருக்கு நன்றி கூறி அவரை ஹீரோ என்கிறார்கள். ட்விட்டரில் ஒருவர், " மேட் வென்னர்ஸ்ரோம் போன்று பலரும் நமக்கு தேவை" என்று பதிவிட்டிருந்தார்.
This young man is a hero. He helped break windows & helped people escape #Borderline
I don't have his name but we need more good guys like him.
Thousand Oaks
Ventura pic.twitter.com/8Vxxce5Bgu
Another wrote, "Perfect example of 'Look for the helpers.' Matt Wennerstrom's ability to stay calm during such a horrific event is something to be admired. His demeanor after the fact is nothing but admirable strength. Kudos to him."
And some argued his name should be spoken rather than the shooter's name.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)