Read in English
This Article is From Jul 15, 2018

கார் ரேடியேட்டரில் இருந்த தண்ணீர் குடித்து உயிர் பிழைத்த பெண், ஒரு வாரத்திற்கு பிறகு மீட்பு

தோள் காயத்துடன் ஆஞ்செலா ஹெர்னாண்டெஸ், பாறையில் மாட்டிக் கொண்டுள்ளதை கண்டறிந்துள்ளனர்

Advertisement
உலகம்

ஒரு வாரத்திற்கு முன்பு மாயமான ஓரிகான் பெண், கலிப்போர்னியா செங்குத்து பாறைகளுக்கு நடுவில் மாட்டி கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

23வயது ஆஞ்செலா ஹெர்னாண்டெஸ், 200 அடி ஆழம் கொண்ட செங்குத்தான பாறையில் மாட்டிகொண்டுள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ் காண்டி பகுதியில் உள்ள தனது சகோதரி இல்லத்திற்கு செல்லும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலையின் குறுக்கே வந்த விலங்கை தாக்காமல் இருக்க வாகனத்தை திருப்பிய போது, செங்குத்தான பாறையில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கு பிறகு, அந்த வழியே நடைப்பயணம் மேற்கொண்ட இரண்டு நபர்கள், பாறையின் அருகில், பாதி மூழ்கி இருந்த ஸ்போர்ட்ஸ் காரை கண்டுள்ளனர். அப்போது பாறையின் அருகில் சென்று பார்த்த போது, தோள் காயத்துடன் ஆஞ்செலா ஹெர்னாண்டெஸ், பாறையில் மாட்டிக் கொண்டுள்ளதை கண்டறிந்துள்ளனர்.

வாகனத்தின் ரேடியேட்டரில் இருந்து வெளிவந்த தண்ணீரை குடித்து கடந்த ஒரு வாரமாக உயிர் பிழைத்துள்ளார் என்று நெடுஞ்சாலை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். “200 அடி ஆழம் கொண்ட செங்குத்தான பாறையில் என்னுடைய சகோதரி மாட்டிகொண்டுள்ளார். மெதுவாக அவர் குணமாவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது” என்று ஹெர்னாண்டெஸின் சகோதரி இசபெல் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தார்.



(हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
Advertisement
Advertisement