முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. (Representational image)
ஹைலைட்ஸ்
- Couple stabbed to death in front of their 7-year-old son, police said
- The man, believed to be the murderer has been arrested
- Neighbours rushed to the flat and saw both lying in a pool of blood
Gurgaon: ஹரியானா மாநிலம் குர்கானில் 7 வயது மகனின் கண் முன்னால் சிறுவனின் பெற்றோர்கள் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலைகாரன் என்று நம்பப்படும் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் வியாழக்கிழமை துண்டேஹெராவில் நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பலியான 31 வயதான விக்ரம் சிங் தனது மனைவி மற்றும் மகனுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட அபினவ் விக்ரம் சிங்கின் நண்பர். “விக்ரம் சிங் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி அபினவ்விடம் 1.5 லட்சம்பெற்றுள்ளார். இருப்பினும் அதற்கான ஏற்பாடுகள் சரிவர செய்யவில்லை. வியாழக்கிழமை கடும் வாக்குவாதம் இருவருக்கும் இடையே ஏற்பட்டு சண்டையும் உருவாகியுள்ளது.
“அபிநவ் திடீரென எழுந்து விக்ரமையும் பின்னர் அதனை தடுக்க முயன்ற மனைவி ஜோதியையும் குத்தினார்” என்று உதவி காவல்துறை ஆணையர் பெராம் சிங் கூறினார்.
சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்ததில் இரத்த வெள்ளத்தில் இருப்பதைக் கண்டு, குற்றவாளிகளை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
சண்டைக்கு முன் அபிநவ் மற்றும் விக்ரம் ஆகியோர் குடித்துக் கொண்டிருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. விசாரணை நடந்து வருகிறது.