காங்கிரஸ் கட்சியிலேயே ஏகப்பட்ட குழப்பங்கள் உள்ளன என்கிறார் தமிழிசை
ஹைலைட்ஸ்
- ''பாஜக தமிழகத்தில் ஓரிடத்தில் கூட வெற்றி பெறாது'' - திருநாவுக்கரசர்
- திருநாவுக்கரசரின் விமர்சனத்திற்கு பாஜக தமிழக தலைவர் பதிலடி
- கூட்டணி இல்லாமல் காங்கிரஸ் ஓரிடத்தில் வெற்றி பெறுமா என கேள்வி
கூட்டணி இல்லாமல் வெற்றி பெறுவீர்களா என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரிடம் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியிருந்தார். இதற்கு பாஜக தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியதாவது-
கூட்டணி இல்லாமல் திருநாவுக்கரசரின் கட்சி வெற்றி பெறுமா?. எங்கள் கட்சி வெற்றி பெறுமா என்பதை திருநாவுக்கரசர் எங்களுக்கு சொல்ல வேண்டிய தேவையில்லை.
காங்கிரஸ் கட்சியிலேயே ஏகப்பட்ட குழப்பங்கள் உள்ளன. இன்றைக்கு கூட்டணி இல்லாமல் காங்கிரஸ் கட்சியால் ஏதாவது செய்ய முடியுமா?. கூட்டணி இல்லாமலேயே நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.
இவ்வாறு தமிழிசை கூறினார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)