This Article is From Feb 22, 2019

திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்று பாமகவால் இன்றைக்கு கூற முடியுமா? – தம்பிதுரை கேள்வி

திராவிட கட்சிளுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறி வந்தார். அக்கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது.

திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்று பாமகவால் இன்றைக்கு கூற முடியுமா? – தம்பிதுரை கேள்வி

அதிமுகவை யாரும் அழிக்க முடியாது என்று தம்பி துரை கூறியுள்ளார்.

திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்று கூறிய பாமகவால் அதே கருத்தை இன்றைக்கு கூற முடியுமா என்று அதிமுக எம்பி தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.

திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று கூறிவந்த பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. அக்கட்சிக்கு 7 மக்களவை தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ், அதிமுக தரப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று கூறியதுடன், திமுக, அதிமுக கட்சிகளை ராமதாஸ் கடுமையாக முன்பு விமர்சித்திருக்கிறார். அந்த வீடியோக்கள் தற்போது திமுகவால் பரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்று கூறிய பாமகவால் அதே கருத்தை இன்றைக்கு கூற முடியுமா என்று அதிமுக எம்பி தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டை பொறுத்தளவில் திராவிடக் கட்சியாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆளும். அதை யாரும் முன்பு ஒழித்து விட முடியாது. திராவிட கட்சிகளை வளர விட மாட்டோம் என்று அவர்கள் (பாமக) கூறியிருந்தால் அது தவறான பேச்சு.

அதை நாங்கள் கண்டிக்கிறோம். திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்று கூறிய பாமகவால் அதே கருத்தை இன்றைக்கு கூற முடியுமா? கூட்டணி என்பது வேறு. பத்திரிகையாளர்கள் கொள்கைக்கும் கூட்டணிக்கும் முடித்துப் போட்டு பேசக் கூடாது என்று அவர் கூறினார்.

.