বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From Jun 15, 2020

இந்த வைரல் படத்தில் இருக்கும் விஷயம் என்னவென்று தெரிகிறதா..? - குழப்பத்தில் நெட்டிசன்ஸ்

பலரும், படத்தில் தெரிவது என்னவென்று யூகிக்க முயன்றார்கள். ஆனால், அவர்கள் சொன்ன பதில்கள் தவறானவை.

Advertisement
விசித்திரம் Edited by

இறந்த மனிதனின் கால் போன்று இருப்பதனால் இந்த பூஞ்சைக்கு இப்படியொரு பெயர்.

இணையத்தில் வைரலாகி வரும் ஒரு படம், பல நெட்டிசன்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. வைரலான புகைப்படத்தில் ஒரு உயிரினத்தின் கால் போன்ற அமைப்பு உள்ளது. அதில் ஐந்து விரல்கள் இருப்பதும் தெரிகின்றன. ஆனால், இதைப் போன்று மனிதர்களுக்குத்தான் ஐந்து நீண்ட விரல்கள் கொண்ட கால்கள் இருக்கும். ஆனால், அது மனிதனின் கால் இல்லை என்பது தெரிகிறது. அதேபோல மிருகத்தின் காலும் இல்லை என்றும் புலப்படுகிறது.

இந்திய வனத் துறை அதிகாரி, சுசாந்தா நந்தா, இந்தப் படத்தை ஒரு நாளுக்கு முன்னர் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். படத்துடன் அவர், “இந்தப் படத்தில் இருக்கும் மிருகத்தை உங்களால் அடையாளம் காண முடிகிறதா?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார். 

படத்தைப் பார்க்க:

பல லைக்ஸ்களை குவித்த படத்துக்கு அதிர்ச்சிகர கமென்ட்ஸ்களும் வந்த வண்ணம் உள்ளன.

Advertisement

‘பார்க்க பயமாக இருக்கிறது,' என ஒரு ட்விட்டர் பயனர் அச்சப்பட,

‘எனது ஞாபகத்திலிருந்து இதை அழிக்க விரும்புகிறேன்,' என்று எட்டிப் போகிறார் இன்னொருவர். 

Advertisement

பலரும், படத்தில் தெரிவது என்னவென்று யூகிக்க முயன்றார்கள். ஆனால், அவர்கள் சொன்ன பதில்கள் தவறானவை.

நந்தாவே, படத்தில் தெரிவது ஒரு வித  ஃபங்கஸ் அல்லது பூஞ்சை என்று தெரிவித்தார். அதன் பெயர் Dead Man's Fingers or Xylaria polymorpha என்றும் கூறினார். 

Advertisement

இறந்த மனிதனின் கால் போன்று இருப்பதனால் இந்த பூஞ்சைக்கு இப்படியொரு பெயர். இந்த பூஞ்சைகள் இரண்டு முதல் ஐந்து கொத்தாக உளுத்துப் போன கட்டைகள் மற்றும் காட்டுப் பகுதிகளில் அதிகம் முளைக்கும்.

Advertisement