Spot the Snake - Eastern brown snake உலகின் இரண்டாவது மிகக் கொடிய நஞ்சுடைய பாம்பாக கருதப்படுகிறது.
பாம்பு (Snake)… இந்த ஒற்றைச் சொல்லை உச்சரிக்கும் போதே பலருக்கு உள்ளூர ஒரு பீதி கிளம்பும். அப்படி பாம்புகளிலேயே மிகவும் கொடிய நஞ்சுடைய பாம்பு என்று சொல்லப்படும் ‘eastern brown snake' அருகில் இரண்டு குழந்தைகள் இருக்கும் படம் ஒன்று இணையத்தில் புயலைக் கிளப்பியிருக்கிறது.
ஆஸ்திரேலியாவின் எஸ்க்டேல் பகுதியில் உள்ள மிட்டா மிட்டா நதிக்கு அருகில் இந்தப் படம் எடுக்கப்பட்டதாக யாஹு செய்தி கூறுகிறது. தி சன் செய்தி நிறுவனம், இந்த புகைப்படம், அதில் இருக்கும் குழந்தைகளின் தாயாரால் எடுக்கப்பட்டது என்று சொல்கிறது. அந்த தாய்தான், பாம்பு வல்லுநர் அமைப்பான ‘விக்டோரியா ஆஸ்திரேலியா'-வுக்கு படத்தை அனுப்பி வைத்துள்ளார்.
இந்தப் படத்தை தங்களது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள விக்டோரியா ஆஸ்திரேலியா, “இந்தப் படத்தில் குழந்தைகளுக்குப் பக்கத்திலேயே இருந்தாலும், யாரையும் தொந்தரவு செய்யாமல் இருக்கும் பாம்பைப் பாருங்கள். இந்தப் படம், பாம்புகள் உண்மையில் மூர்க்கமானவை கிடையாது என்றும், அவைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதையும் நமக்கு உணர்த்துகின்றன” என்ற தகவலைப் பகிர்ந்துள்ளது.
பாம்பை உங்களால் பார்க்க முடிகிறதா..?
பாம்பை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லையா..? கீழே ஜூம் செய்த போட்டோவின் வலதுபுறம் பாருங்கள்.
Eastern brown snake உலகின் இரண்டாவது மிகக் கொடிய நஞ்சுடைய பாம்பாக கருதப்படுகிறது. அவை மண்ணோடு மண்ணாக இருந்து, இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் வித்தையைக் கற்ற பாம்பு.
Click for more
trending news