বাংলায় পড়ুন
This Article is From Nov 22, 2018

மணக்கோலத்தில் பனிப்பெண் இணையத்தை கலக்கும் 'நம்ம ஜூலியட்’

இந்த பனிப் பெண்னின் புகைப்படங்களுக்கு இணையத்தில் 86,000 லைக்குகளூம், 12,000ற்கும் மேல் மறு ட்வீட்களும் கிடைத்தது.

Advertisement
விசித்திரம்

தீபிகா மற்றும் ரன்வீரின் அழகிய திருமண புகைப்படங்கள் இணையத்தில் செல்லும் இடமெல்லாம் குவிந்து வரும் நிலையில் கனடாவை சேர்ந்த ‘ சாத்தி ஜூலியட்' என்ற பனி பெண்ணின் புகைப்படங்கள் இணையத்தை கலக்கியது

கனடாவில் உள்ள பிராம்டன் நகரை சேர்ந்த 19 வயது ஜாசு கிங்கரா, இந்தியாவை சேர்ந்த தல்ஜித்தின் தன் வீட்டுக்கு அழைத்திருந்தார். கனடாவில் 
தல்ஜித் இருக்கும் முதல் பனிக்காலம் என்பதால் இரு தோழிகளும் பனி மனிதனை செய்ய முடிவெடுத்தனர்.

இந்நிலையில் பனிப் பெண்னை உருவாக்க தனது தங்கைகளின் உதவியை நாடினார்கள். ஜாசுவுக்கு நவி (15), பினி (9) ஆகியோர் உதவினார்கள்.

தங்க ஆபரணங்கள், நீண்ட கண் இமைகள் மற்றும் ஒரு பிரகாசமான சிவப்பு திருமண பட்டுத் துணியால் அலங்கரிக்கப்பட்ட அந்த பனிப் பெணுக்கு ‘சாத்தி ஜூலியட்' ‘அதாவது நம்ம ஜூலியட்' என பெயரிடப்பட்டது.

இந்த பனிப் பெண்னின் புகைப்படங்களுக்கு இணையத்தில் 86,000 லைக்குகளூம், 12,000ற்கும் மேல் மறு ட்வீட்களும் கிடைத்தது.

Advertisement

‘ வழக்கமாக பனி மனிதனை செய்ய வேண்டும் என்பதே எங்களது ஆசையாக இருந்தது ஆனால் அதில் இந்திய உணர்வை பிரதிபலிக்க கலர்பூல்லாக மாற்றினோம்' என ஜாசு கிங்கரா தெரிவித்தார்.

 

Advertisement
Advertisement