Prime Minister Justin Trudeau's 2015 campaign promise included legalizing weed
ஹைலைட்ஸ்
- கனடாவில் மரிஜுவானா விற்பனை, உபயோகத்திற்கு சட்டப்பூர்வ அனுமதி
- எழுநாடுகள் கொண்ட குழுவில் முதலாவதாக கனடா
- மரிஜூவானா பொருட்களை மக்கள் உபயோகிப்பது குறித்த ஆய்வுக்கு நிதி
ஏழு நாடுகள் கொண்ட குழுவில், முதல் முறையாக கனடா நாட்டில் மரிஜூவானா பொருளை விற்கவும், உபயோகப்படுத்துவதும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் 52 வாக்குகள் ஆதரவாகவும், 30 வாக்குகள் எதிராகவும், 1 வாக்களிக்காமலும் இருந்த நிலையில் பில் C-45 அல்லது கன்னாபிஸ் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த நவம்பர் மாதம் 2017, மக்களவையில் நிறைவேற்றப்பட்ட கன்னாபிஸ் சட்டம், மீண்டும் கனடா சட்டடபையில் செய்யப்பட்ட மாற்றங்களை சமர்ப்பிக்க மக்களவைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மரிஜூவானா சட்டப்பூர்வமாக்குவது, கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடியோவின் 2017ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் வாக்குறுதியாக இருந்தது. நண்பர்களுடன் சேர்ந்து ஐந்து அல்லது ஆறு முறை போதைப் பொருள் சாப்பிட்டுள்ளதாக ஜஸ்டின் ட்ருடியோ தெரிவித்துள்ளார்.
2001ம் ஆண்டு முதல் கனாடாவில் மருத்துவ மரிஜூவானா விற்பது சட்டத்துக்கு உட்பட்டதாகும்.
பில் C-45 சட்டத்தின் கீழ், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், தனிப்பட்ட பயன்பாட்டிற்காக 30 கிராம் மரிஜூவானா பெற்றுக்கொள்ளலாம்.
18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மரிஜூவானா விற்பது கூட்டாட்சியின் சட்டப்படி தண்டனைக்குறியதாகும். எனினும், வயது வரம்பு விதிமுறைகளை தனித்தனி மாகானங்கள் தீர்மானித்துக் கொள்ளலாம்.
கடந்த ஆண்டு, மரிஜூவானா விற்பனையை பார்க்கும் போது, 5.7 பில்லியன் கனடா டாலர்கள் (4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) சந்தையில் விற்பனையாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் ஒன்பது மாகானங்களிலும், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே உருகுவேயிலும் மரிஜூவானா சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏழு நாடுகள் கொண்ட குழுவில், முதல் நாடாக கனாடா இந்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
ஏ.எஃப்.பியின் நேர்காணல் ஒன்றில் பேசிய ட்ருடியோ, உலக நாடுகள் கனடாவின் திட்டங்களை கவனித்து வருகிறது என்றார்.
“கனடா நாட்டின் செயற்பாட்டை பார்த்து நேச நாடுகள் ஆர்வமடைகின்றன” என்றார். “கனடா நாடு டார்லிங்காக இருந்து வருகிறது. ஏனெனில், இந்த காலகட்டதில் தடை செய்வது சரியாக இருக்காது. இளைஞர்கள் கன்னாபிஸ் பெறுவதற்கு தடை விதிக்காது”
“கனடா போன்று பிற நாடுகளில், இளைஞர்களுக்கு போதை பொருட்கள் எளிதாக கிடைக்கின்றன. அதனால், சட்ட விரோதமாக செய்யும் விற்பனையில் பெரிய அளவில் பணம் புரள்கிறது” என்றார்.
மேலும் தொடர்ந்தவர், ”கொள்ளை கூட்டங்களிடம் இருப்பதற்கு பதிலாக, கட்டுப்படுத்தப்பட்ட சந்தையாக இருந்தால், சமூகத்தையும் குழந்தைகளையும் பாதுகாக்கலாம்” என்றார்.
இந்த திட்டத்தை நிறைவேற்ற ஆர்வம் கொண்ட நேச நாடுகள் கொண்டுள்ள இங்கு நிலவரம் எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொண்டு பின்னர், முயற்சி செய்ய இருப்பதாக கூறினார். ஆனால், நாடுகளின் பெயர்களை பிரதமர் ட்ருடியோ குறிப்பிடவில்லை
அதுமட்டுமல்லாது, கூட்டாட்சி அரசு மற்றும் மாகாணங்களில் ஆண்டுக்கு நூறு மில்லியன் டாலர்களுக்கு விற்கப்படும் சட்டப்பூர்வமான போதை பொருட்களுக்கு வரி விதிக்க உள்ளது.
குபெக் மற்றும் ஆண்டோரியோவில் இருக்கும் மதுபான விற்பனையை போலவே, அங்கீகரிக்கப்பட்ட கடை வியாபாரிகள் இருப்பர்.
105 வணிகர்கள் மரிஜூவானா வளர்ப்பதற்கும், பானை அளவு விற்பனைக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட மரிஜூவானா பொருட்களை மக்கள் உபயோகிப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள நிது ஒதுக்கியுள்ளது.