Cannes 2019: Aishwarya Rai Bachchan with Aaradhya (courtesy Twitter)
ஹைலைட்ஸ்
- ஐஸ்வர்யா கோல்டன் நிறக் கவுன் அணிந்து வந்திருந்தார்.
- ஐஸ்வர்யா ராய் காதிலும் கோல்டன் மேக்கப் செய்திருந்தார்.
- ஐஸ்வர்யா ராய் வயது 45
New Delhi: கென்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இதில் ஐஸ்வர்யா ராய் பச்சன் தன்னுடைய பெண் ஆராதியவுடன் கலந்து கொண்டனர். ஐஸ்வர்யா பளபளப்பான பெரிய உடையுடன் ரெட் கார்ப்பெட்டில் நடந்து வந்தார்.
ஒவ்வொரு ஆண்டும் பிரான்ஸில் கென்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் ஐஸ்வர்யாராய்க்கு கிடைக்கும் புகழும் அங்கீகாரமும் தனிச்சிறப்புடையது. 45 வயதிலும் அழகும் வசீகரமும் குறையாமல் தொடர்ந்து தனக்கான ரசிகர்களை தக்கவைத்து வருகிறார்.
கோல்டன் க்ளிட்டர் நிறத்தில் பெரிய உடையுடன் காதில் கோல்டன் க்ளிட் மேக்கப் போட்டு அட்டகாசமான உடையில் வந்திருந்தார்.
ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராதியா இருவரும் பிரான்ஸ் போய் இறங்கியதும் வரவேற்பாக கொடுக்கப்பட்ட பெரிய ரோஜாப்பூ செண்டுடன் புகைப்படம் எடுத்து தன்னுடைய இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
தீபிகா படுகோன், பிரியங்கால் சோப்ரா, கங்கனா ரணாவத், ஹீயுமா க்ரோஷி, தினா பெண்டி, ஹீனா கான் மற்றும் மல்லிகா ஷராவத் எனப் பலரும் கென்ஸ் திரைப்படவிழாவில் கலந்து கொண்டனர்.