தீபிகா படுகோன் ரெட் கார்பெட் லுக் (courtesy: deepikapadukone
ஹைலைட்ஸ்
- கென்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.
- இந்திய பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
- தீபிகா படுகோன், கங்கனா இருவரும் கவர்ச்சியான தோற்றம் பலரை கவர்ந்தது
New Delhi: கென்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. பல இந்திய சினிமா உலகப் பிரபலங்கள் பலர் இதில் கலந்து கொண்டனர். தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, கங்கனா ரனாவத் ஆகிய பலரும் சிவப்பு கம்பள வரவேற்பில் கலந்து கொண்டனர். இவர்களின் அட்டகாச புகைபடங்களை தங்களை சமூக வலைதள பக்கங்களிலும் இண்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளனர். தீபிகா படுகோன் பிரவுன் நிற பெரிய சைஸ் போவ் உடையில் வந்திருந்தார். பிரியங்கா சோப்ரா, கங்கனா ரனாவத் ஆகியோரும் அட்டகாச உடையில் வந்திருந்தனர்.
தீபிகா படுகோன் க்ரிம் கவுனில் சாக்லேட் பிரவுன் போவ் ஒன்றும் உள்ள உடையை அணிந்திருந்தார்.
கங்கனா ரனாவத் ஹாட்டான உடையில் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். கருப்பு நிறத்தில் வேலைப்பாடுகள் நிறைந்த ஜாக்கெட் அணிந்திருந்தார். இந்த உடையின் வடிவமைப்பாளர் நீடோ.
கங்கனா அழகான சேலையில் அட்டகாசமான தோற்றத்தில் வந்திருந்தார். ரெட்ரோக்கான தோற்றத்தில் உடை அணிந்திருந்தார்.
பிரியங்கா சோப்ரா பளபளப்பான கருப்பு நிற உடையில் கென்ஸ் திரைப்பட விழாவிற்கு வருகை தந்திருந்தார்.
இன்னும் பல ஆச்சரியங்களை கென்ஸ் திரைப்பட விழா கொடுக்கவுள்ளது.