New Delhi: தற்போது இந்திய-சீன எல்லையில் உருவாகியுள்ள பிரச்னைக்கு முழு காரணமும் இந்தியாதான் என சீனா இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நேற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற கலந்தாலோசனையில் பங்கேற்ற இரு நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர்களும் எல்லை பிரச்னை குறித்து விவாதித்தாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை சீனா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “சீனா-இந்தியா எல்லையில் தற்போதைய பதற்றத்தின் காரணங்களும் உண்மையும் தெளிவாக உள்ளன, மேலும் பொறுப்பு முற்றிலும் இந்தியாவுக்குத்தான். சீனா தனது பிரதேசத்தின் ஒரு அங்குலத்தை கூட இழக்க தயாராக இல்லை. தேசிய இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதில் திறமையும் நம்பிக்கையும் கொண்ட ஆயுத படைகள் முழு பலத்தோடு உள்ளது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக மாஸ்கோவில் நடத்த கூட்டத்தில் பங்கேற்றபின் “அமைதி மற்றும் பாதுகாப்பு நம்பிக்கை, ஆக்கிரமிப்பு இல்லாதது, அமைதியான வேறுபாடுகளைத் தீர்ப்பது மற்றும் சர்வதேச விதிகளுக்கு மதிப்பளித்தல்” ஆகியவற்றைக் குறித்து வலியுறுத்தியிருந்தார்.