2014-ல் நடைபெற்ற தேர்தலில் ராம்தேவ் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தார்.
ஹைலைட்ஸ்
- 2014 தேர்தலில் பாஜகவுக்கு ராம்தேவ் ஆதரவு தெரிவித்தார்
- அரசியலை விட்டு ஒதுங்கி விட்டதாக ராம்தேவ் கூறியுள்ளார்
- 3 மாநிலங்களில் பாஜக ஆட்சியை இழந்த நிலையில் ராம்தேவ் கருத்து கூறியுள்ளார்
Madurai, Tamil Nadu: 2019 Lok sabha Elections: நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்று சொல்ல முடியாது என்று யோகா குரு ராம்தேவ் கூறியுள்ளார். எந்தக் கட்சிக்கு தான் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் யோகா குரு ராம்தேவ் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது-
தற்போதைய அரசியல் நிலைமை மிகவும் கணிக்க முடியாத நிலையில் உள்ளது. 2019 மக்களவை தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று நம்மால் கூற முடியாது. ஆனால் கடும் போட்டி இருக்கும் என்பது மட்டும் உறுதி.
இந்த தேர்தலில் நான் யாருக்கும் ஆதரவு அளிக்கப்போது இல்லை. நான் அரசியலில் கவனம் செலுத்தப் போவதும் கிடையாது. எங்களுக்கு அரசியல் செயல் திட்டம் இல்லை. ஆனால் நாடும், உலகமும் ஆன்மிக தன்மையுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2014 மக்களவை தேர்தலில் பாஜகவை ஆதரித்து ராம் தேவ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். தற்போது 3 மாநிலங்களில் பாஜக ஆட்சியை இழந்திருக்கும் நிலையில் இவ்வாறான பேட்டியை ராம் தேவ் கூறியிருக்கிறார்.
கடந்த செப்டம்பரின்போது NDTV-க்கு அளித்த பேட்டியிலும், தான் அரசியலை விட்டு தூரம் சென்று விட்டதாக ராம் தேவ் கூறியிருந்தார்.