மகாராஷ்டிராவில் காங்கிரஸ் - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி ஆட்சியை நடத்தி வருகின்றன.
ஹைலைட்ஸ்
- கொரோனா பாதிப்பால் தனது வீட்டிலிருந்து பணிகளை கவனிக்கிறார் உத்தவ்
- உத்தவ் தாக்கரேவை எதிர்க்கட்சியான பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது
- மக்களை உத்தவ் நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிய பாஜக வலியுறுத்தல்
Pune: வீட்டிலிருந்துகொண்டு மகாராஷ்டிராவை நிர்வகிக்க முடியாது என்று முதல்வர் உத்தவ் தாக்கரேவை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியதாவது-
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியைப் போன்று, மாநிலத்தை ஆள்பவர்கள் நேராக களத்திற்கு சென்று மக்களை சந்திக்க வேண்டும். வெறுமனே, வீட்டில் இருந்து கொண்டு மகாராஷ்டிராவை நிர்வகிக்க முடியாது.
இந்த கொரோனா காலத்தில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், உத்தவ் தாக்கரேவின் வீட்டிற்கு அடிக்கடி செல்கிறார். உத்தவ் தாக்கரே இந்த கொரோனா காலத்தில் பிரபல பந்தார்பூர் கோயிலுக்கும், மும்பையில் உள்ள சில கொரோனா மையத்திற்கு மட்டுமே சென்றுள்ளார்.
அதன்பின்னர் உத்தவ் தாக்கரே வீட்டை விட்டு வெளியே வரவில்லை. ஆனால் பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவீஸ் ஒவ்வொரு நாளும், அனைத்து இடங்களுக்கும் செல்கிறார்.
மக்களுக்கு சேவை செய்யும்போது ஒருவரால் வீட்டில் இருக்க முடியாது. முதல்வரால் நேராக களத்திற்கு செல்ல முடியாது என்றால், அவரது இல்லத்திலாவது மக்களை அவர் சந்திக்க வேண்டும்.
சரத் பவார் ஒரு மதிப்பு மிக்க தலைவர். அவர் அடிக்கடி உத்தவ் தாக்கரேவின் வீட்டிற்கு செல்வதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் கூறினார். மகாராஷ்டிராவில் காங்கிரஸ் - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி ஆட்சியை நடத்தி வருகின்றன.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)