This Article is From Nov 13, 2019

அவசரநிலையைத் தொடவுள்ள Delhi Air Pollution - நெருக்கடியில் தலைநகரம்!

தற்போது நிலவி வரும் மிக மோசமான காற்று மாசு சூழல், அடுத்த 2 நாட்களுக்குத் தொடரும் என்றும், நவம்பர் 15 ஆம் தேதியன்று இதில் மாற்றம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

அவசரநிலையைத் தொடவுள்ள Delhi Air Pollution - நெருக்கடியில் தலைநகரம்!

டெல்லியின் காற்று மாசுவிற்கு 25 சதவிகித காரணம், அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் விவசாயக் கழிவுகள்தான்

New Delhi:

டெல்லியில் (Delhi) கடந்த சில நாட்களாக காற்று மாசு (Air Pollution), சற்று குறைந்திருந்த நிலையில் அது மீண்டும் உச்சத்தைத் தொட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டெல்லியின் அண்டை மாநிலங்களில் தொடர்ந்து எரிக்கப்பட்டு வரும் விவசாயக் கழிவுகளால், தலைநகரின் காற்று மாசு ‘Severe' நிலையிலிருந்து ‘Emergency' நிலைக்கு மாறும் என்று கணிக்கப்படுகிறது. 

நாட்டில் காற்றின் தரத்தை சோதிக்கும் மத்திய அரசின் SAFAR அமைப்பு, டெல்லி காற்றின் தரம் மிக மோசமானதாக மாற உள்ளது என்று கூறியுள்ளது.  நேற்று டெல்லியின் வெப்பநிலை, 11.7 டிகிரி செல்ஷியஸாக இருந்தது. குளிர்காலத்தில் பதிவு செய்யப்பட்ட மிகக் குறைவான வெப்பநிலை இதுவே. 

‘இப்படி வெப்பநிலை குறைவது, காற்றின் வேகத்தைக் குறைத்து, அதனை அடர்த்தியானதாக மாற்றும். இதனால், காற்று மாசுக்கள் குவியத் தொடங்கும்,' என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவிக்கிறது. 

கடந்த திங்கட் கிழமை டெல்லியின் AQI, 360 ஆக இருந்தது. அதே நேரத்தில் செவ்வாய் கிழமை AQI, 425 ஆக அதிகரித்தது. அதேபோல PM 2.5 அளவு மற்றும் PM 10 அளவுகளும் கணிசமாக உயர்ந்துள்ளன. 

டெல்லி அரசு, கடந்த சில நாட்களாக வாகனக் கட்டுப்பாடு விதிக்கும் வகையில் odd - even திட்டத்தை அமல் செய்து வந்தது. சீக்கிய மத நிறுவனரான குரு நானக் தேவின் 550வது பிறந்தநாளை முன்னிட்டு அந்த கட்டுப்பாட்டை இன்று தளர்த்தியுள்ளது மாநில அரசு. 

டெல்லியின் பவனாவின் காற்று தரம் மிக மோசமாக 458 AQI ஆக இருந்தது. அதைத் தொடர்ந்து வசீர்பூர் காற்றின் தரம் 454 AQI ஆக உள்ளது. துவாரகா செக்டார்-8 ல் காற்றின் தரம் 453 ஆக உஇருக்கிறது. 

201 முதல் 300 AQI இருந்தால், மோசமான காற்று இருப்பதாக பொருள். 301 முதல் 400 AQI இருந்தால் மிக மோசமான காற்று உள்ளது என அர்த்தம். 401 முதல் 500 AQI என்றால், மிக மிக மோசமான காற்று மாசு சூழல் என்று அர்த்தம். அதே நேரத்தில் AQI, 500-ஐத் தாண்டினால் அது கிட்டத்தட்ட அவசரநிலையைத் தொடும் அளவாகும். 

தற்போது நிலவி வரும் மிக மோசமான காற்று மாசு சூழல், அடுத்த 2 நாட்களுக்குத் தொடரும் என்றும், நவம்பர் 15 ஆம் தேதியன்று இதில் மாற்றம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

டெல்லியின் காற்று மாசுவிற்கு 25 சதவிகித காரணம், அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் விவசாயக் கழிவுகள்தான். பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் அதிக அளவு கழிவுகளை எரிப்பதால் இந்தப் பிரச்னை வருவதாக தெரிகிறது. விவசாயிகள், இந்நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் சென்ற வாரம் உத்தரவிட்ட போதும், போதிய நிதி ஆதாரம் இல்லாத காரணத்தால், கழிவுகள் தொடர்ந்து எரிக்கப்பட்டு வருகிறது. 

மத்திய, மாநில அரசுகள், விவசாயக் கழிவுகளை எரிக்காமல் கையாளுவதற்கு 50 முதல் 80 சதவிகித மானியத்தைக் கொடுத்தாலும், மீதம் உள்ள பணத்தைக் கொடுக்கும் அளவுக்கு விவசாயிகளிடம் நிதி இல்லை எனப்படுகிறது. இந்தப் பிரச்னை அடுத்த ஆண்டும் தொடரலாம் என்று மத்திய அரசு தரப்பு தெரிவித்துள்ளது.


 

.