Read in English
This Article is From Jan 09, 2019

ஐயன் மேன் Vs கேப்டன் அமெரிக்கா. சூடுபிடிக்கும் அவென்ஞ்சர்ஸ் வார்

திரை வாழ்க்கையில் தான் இப்படி என்று நினைத்தால், நிஜ வாழ்விலும் தொழில்நுட்பங்களை கேப்டன் அமெரிக்கா வெறுக்கிறார்

Advertisement
விசித்திரம் Posted by

மார்க் ரஃப்பலோ மற்றும் ராபர்ட் டவுனி ஜுனியர். (Image courtesy: Instagram)

New Delhi:

அவென்ஞ்சர்ஸ் படம் மூலம் பல மக்களின் விருப்ப ஹீரோக்களாக மாறியவர்கள் கேப்டன் அமெரிக்கா, ஐயன் மேன், ஹல்க். கேப்டன் அமெரிக்கா கதாப்பாத்திரத்தில் கிறிஸ் இவான்ஸ், ஐயன் மேனாக ராபர்ட் டவுனி ஜுனியர்,  ஹல்காக மார்க் ரஃப்பலோ நடித்துள்ளனர். அவர்கள் நடிப்பில் அவென்ஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் விரைவில் வெளிவரவுள்ளது.

படத்தில் தொழில்நுட்ப வல்லுநர்களாக ஐயன் மேனும் ஹல்க்கும் வலம் வருவார்கள். கேப்டன் அமெரிக்காவோ தொழில்நுட்பத்தை அவ்வளவு விரும்புவதில்லை.

திரை வாழ்க்கையில் தான் இப்படி என்று நினைத்தால், நிஜ வாழ்விலும் தொழில்நுட்பங்களை கேப்டன் அமெரிக்கா வெறுக்கிறார். இதனை ட்விட்டரில்,  வெளிப்படுத்திய கிறிஸ் இவான்ஸை  ராபர்ட் டவுனி ஜுனியர், மார்க் ரஃப்பலோவும் கலாய்த்து ட்வீட் செய்தனர்.

Advertisement

இவான்ஸின் ட்வீட்க்கு, ‘கேப்டனுக்கு நமது உதவி தேவைப்படுகிறது போல். வாருங்கள் ஹல்க் போய் உதவுவோம்' என ரிப்ளே செய்தார் ராபர்ட் டவுனி ஜுனியர்.

 

‘ஆர்க் ரியாக்டர்க்கு அடிக்கடி கோளாறு ஏற்படாது என எண்ணுகிறேன்' என பதிலுக்கு ட்விட் செய்தார் கிறிஸ் இவான்ஸ்.  ஆர்க் ரியாக்டர் என்பது ஐயன் மேனின் ஆயுதமாகும்

Advertisement

 

 

2018 இல் வெளிவந்த அவென்ஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் படத்தின் இறுதி பாகமாக அவென்ஞ்சர்ஸ் எண்ட் கேம் வருகிறது. அவென்ஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் படத்தின் இறுதியில் உயிருடன் இருந்த கேப்டன் அமெரிக்கா, ஐயன் மேன் மற்றும் ஹல்க் ஆகியோர்  வில்லன் தானோஸை எதிர்த்துப் போராட உள்ளனர். ஏப்ரல் மாதம் இது திரைக்கு வருகிறது.

Advertisement

 

Advertisement