காரில் இருந்த வெடிகுண்டே வெடித்து சிதறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Jammu: ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ரம்பன் பகுதியில் சாலையில் நின்றுகொண்டிருந்த கார் திடீரென வெடித்து சிதறியதில் நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூரத்தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காருக்குள் இருந்த சிலிண்டரே காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தனியாக காரை விட்டுவிட்டு அதன் ஓட்டுநர் தப்பிச்சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
தொடர்ந்து விபத்துக்குள்ளான கார் யாருடையது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)