Read in English
This Article is From Jun 13, 2018

அடுக்குமாடி பார்க்கிங்கில் அந்தரத்தில் தொங்கிய கார்

தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்குள் கயிற்றின் மூலமாக வாகனத்தை இழுத்து காரை மீட்டனர்

Advertisement
விசித்திரம்
கலிஃபோர்னியாவில் உள்ள அடுக்குமாடி கார் பார்க்கிங்கின் 4வது மாடியிலிருந்து அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த காரால் பதற்றம் நிலவியது. அந்த காரை ஓட்டிய வயதான பெண் ஓட்டுனரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். 
 
இதுபற்றி ஏபிஸி நியூஸ் கூறியதாவது:

ஒரு வயதான பெண்மணி தெரியாமல் பிரேக்குக்கு பதிலாக ஆக்சலரேட்டரை அழுத்தியதால், கட்டுப்பாட்ட இழந்துள்ளார். அந்த கார் நேராக பாதுகாப்பு கம்பியில் மோதி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.

அனைவரும் அந்த கார் எந்நேரத்திலும் விழுந்துவிடும் என்று எண்ணினர். 

Advertisement
தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்குள் கயிற்றின் மூலமாக வாகனத்தை இழுத்து காரை மீட்டனர். இதில் யாரும் காயம் அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Santa Monica fire department confirmed that no one was injured in the incident.


 
Advertisement
Advertisement