This Article is From Jul 25, 2020

தனியார் செய்தி நிறுவன மோசடி மெயில் புகாரில் வழக்குப்பதிவு!

இந்நிலையில் மாரிதாஸ் சமூக ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதைப்போல நிர்வாகம் எவ்வித இ-மெயிலையும் அவருக்கு அனுப்பவில்லையென நிறுவனம் தெரிவித்திருந்தது. மேலும் இது குறித்து சட்ட ரீதியாக புகாரளிக்கப்படும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.

தனியார் செய்தி நிறுவன மோசடி மெயில் புகாரில் வழக்குப்பதிவு!

சமீபத்தில் தமிழக அரசியலில் இரு வேறு கருத்துக்கள் தொடர்ந்து கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தமிழக முன்னணி தனியார் செய்தி நிறுவனத்தின் ஊழியர்களை விமர்சித்து மாரிதாஸ் எனும் நபர் யூ டியூபில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். தான் பதிவிட்ட வீடியோவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் தனது ஊழியர்கள் மீது நிர்வாக ரீதியில் நடவடிக்கையை எடுப்போம் என தனக்கு இ-மெயில் அனுப்பியதாக மாரிதாஸ் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் மாரிதாஸ் சமூக ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதைப்போல நிர்வாகம் எவ்வித இ-மெயிலையும் அவருக்கு அனுப்பவில்லையென நிறுவனம் தெரிவித்திருந்தது. மேலும் இது குறித்து சட்ட ரீதியாக புகாரளிக்கப்படும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாக மோசடி மெயில் தொடர்பாக வினய் சராவகி அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். மோசடி, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவது, போலி ஆவணங்கள், போலிச் செய்திகளை பரப்புவதாக கூறி இந்தியத் தண்டனைச் சட்டம் 465, 469, 471 மற்றும் இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம் 43-ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் காவல்துறையின் முதல் தகவலறிக்கை சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

.