Read in English
This Article is From Dec 21, 2019

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டம்! சென்னையில் 600 பேர் மீது வழக்குப்பதிவு!!

வியாழன் அன்று நடைபெற்ற போராட்டத்தில் பல்வேறு தரப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Advertisement
இந்தியா Edited by

சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் நடிகர்கள், சமூக அமைப்பை சேர்ந்தவர்கள், இடதுசாரிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Chennai:

சென்னையில் குடியுரிமை சட்ட திருத்தத்தை ரத்து செய்யக் கோரி நேற்று போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற சுமார் 600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் நடிகர்கள், சமூக அமைப்பை சேர்ந்தவர்கள், இடதுசாரிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் உள்பட சமூக அமைப்புகளின் நிர்வாகிகள், இடதுசாரிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தை ஒருங்கிணைத்தனர். போராட்டத்தின்போது ஆர்.எஸ்.எஸ்., பாஜக, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

இந்திய தண்டனை சட்டத்தின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

Advertisement

இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 143, Under Section 41 Class VI -ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். 

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 143-ன்படி, சட்ட விரோதமாக கூடுவதற்கு எதிராக அதிகபட்சம் 6 மாதங்கள் சிறை தண்டனை, அபராதம் அல்லது அவை இரண்டும் தண்டனையாக வழங்கப்படும். 
 

Advertisement
Advertisement