கோவை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குறித்து, பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் எச்.ராஜா கடந்த ஏப்ரல் மாதம் ட்விட்டர் பக்கத்தில் அவதூறாக விமர்சனம் செய்திருந்தார். அதற்கு, கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
இதையடுத்து, கோவை மாவட்டம் கனியூர் பகுதியின் முன்னாள் பேரூராட்சித் தலைவர் வேலுச்சாமி என்பவர், கடந்த ஏப்ரல் மாதம் கருமத்தம்பட்டி காவல் துறையினரிடம் புகார் அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து, எச்.ராஜா மீது 500, 501 ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
சமீபத்தில் நீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து ஹெச்.ராஜா பேசிய கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், எச்.ராஜா மீது ஈரோட்டிலும் நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)