This Article is From Apr 18, 2018

பணமில்லாத ஏடிஎம்களால் அல்லாடும் மக்கள், அரசியல் தலைவர்கள் கண்டனம்.

கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு

People in many states are complaining of cash crunch at ATMs

ஹைலைட்ஸ்

  • Reports of ATMs running dry in several parts of the country
  • Reserve Bank clarifies there is sufficient cash in RBI vaults
  • Printing of notes ramped up in all 4 note presses: RBI
New Delhi: கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலுள்ள ஏடிஎம்களில் பணமில்லாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாவது பற்றி தொடர்ச்சியாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. 2016 பணமதிப்பு நீக்கத்தினால் ஏற்பட்ட பரிதாப நிலையை ஏடிஎம்களில் பணமில்லாததால் நிற்கும் நீண்ட வரிசைகளும் சோகமான முகங்களும் நினைவுபடுத்துகிறது. ஹைதராபாத்தில், நேற்று நள்ளிரவு வரை ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்க முடியவில்லை என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. இதே நிலைதான் வாரணாசியிலும் நிலவுகிறது.

    “ஹைதராபாத்தில் உள்ள பல ஏடிஎம்களில் பணமில்லாத காரணத்தால் எங்களால் பணம் எடுக்க முடியவில்லை. ஒவ்வொரு ஏடிஎம்மாக அலைந்ததுதான் மிச்சம்” என்று ஹைதராபாத் வாழ் பொதுமக்கள் தெரிவித்தார்கள்.

கடந்த வியாழக்கிழமை நித்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள்  மத்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகளோடு இதுபற்றி கலந்துரையாடி நிலைமையை ஆராய கூட்டம் ஒன்றை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. என்டிடிவிக்கு கிடைத்த தகவலின்படி மத்திய ரிசர்வ் வங்கிப் பணம் அதிகமாக உள்ள வங்கிகள், பணம் இல்லாத வங்கிகளுக்குக் கொடுத்துதவுமாறு கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது.

ஏடிஎம்களில் பணமில்லாத இந்தப் பிரச்சனை நவம்பர் 2016 ஐ அனைவருக்கும் நினைவுபடுத்துகிறது. இந்தப் பிரச்சனை பற்றி மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டரில் “ ஏடிஎம்களில் நவம்பர் 2016லும் பணம் இல்லை. இப்போதும் பணம் இல்லை. எப்போதும் பணம் இருக்கும் ஒரே இடம் தெரியுமா? பாஜகதான். பாஜக மகிழ்ச்சி! மக்கள் அவதி!!" என்று தெரிவித்துள்ளார்.

போபால் வாழ்மக்கள் இந்தப் பிரச்சனையைப் பற்றிக் கூறும்போது, “ஏடிஎம்களில் பணம் வரவில்லை, கடுமையான பணத்தட்டுப்பாடு நிலவுகிறது. பதினைந்து நாட்களாக இந்த சிரமம் நீடிக்கிறது. இன்றைக்கு கூட நாங்கள் பல ஏடிஎம்களில் முயற்சித்துப் பார்த்தும் எந்த பிரயோஜனமும் இல்லை.

ஆனால், மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் "2000 ரூபாய் நோட்டுக்கள் சந்தையிலிருந்து திடுமென்று காணாமல் போவதற்குப்பின் சதித்திட்டம் உள்ளது" என்று குற்றஞ்சாட்டியுள்ளார். விவசாயிகள் கூட்டமொன்றில் அவர் உரையாற்றும்பொழுது “பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்பாக பதினைந்து லட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் இருந்தது. இப்போது பதினாறு லட்சத்து ஐம்பாதாயிரம் கோடி ரூபாய் புழக்கத்தில் உள்ளது. ஆனால் 2000 ரூபாய் நோட்டுகள் சந்தையில்
 
.