அங்கி மற்றும் டான்லி என்னும் இரண்டு பூனைகள் பிப்ரவரி 5 ஆம் தேதி திருடுபோயின
Taipei, Taiwan: இரண்டு பூனை குட்டிகளை ஹாங்காங்கில் இருந்து தைவானுக்கு ஒரு பெண் கடத்தி கொண்டு வந்துள்ளார். அவர் விமான நிலைய சிசிடிவி கேமரா மூலம் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
ஹாங்காங்கில் பூனைகளை வளர்க்கும் சங் சின் இ என்பவர், தன்னிடம் இருந்த அங்கி மற்றும் டான்லி என்னும் இரண்டு பூனைகளை திருடு போயிருப்பதாக பிப்ரவரி 5 ஆம் தேதி புகார் தெரிவித்துள்ளார். திருடப்பட்ட இரண்டு பூனைகளும் பெர்சியன் வகையைச் சேர்ந்தவையாகும். அவை ஒவ்வொன்றும் சுமார் 3,300 டாலர் மதிப்புள்ளவை.
தன்னிடம் பூனை வாங்க வந்த ஹாங்காங் பெண்மனிதான் இந்தப் பூனைகளை திருடியிருக்கக் கூடும் என சங் சின் எண்ணியுள்ளார்.
சங் சின் வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்தபோது, அந்த ஹாங்காங் பெண், இரண்டு பூனைகளை திருடி தனது வெள்ளை நிற பையில் வைப்பது தெரியவந்தது.
பின் அந்த பெண்மனி, கர்ப்பமாக இருப்பது போல் நடித்து திருடிய பூனைகளை மறைத்து வைத்து விமானம் மூலம் தைவான் சென்றுள்ளார். விமான கெடுபிடிகளில் சிக்காமல் எப்படி பூனைகளை கடத்தினார் என தைவான் போலீஸ் விசாரித்து வருகின்றது.
ஹாங்காங்கில் இருந்து தைவானுக்கு பூனைகளை கொண்டு வர வேண்டும் என்றால், தகுந்த சான்றிதழ்கள் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : உலகின் சிறந்த உணவகம் எது தெரியுமா?
Click for more
trending news