This Article is From Jun 24, 2019

''மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்''

''எல்லாவற்றுக்கும் மேலாக இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. எனவே இந்த சூழல்களை கருத்தில் கொண்டு, மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு அளித்திருக்கும் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.''

Advertisement
இந்தியா Written by

மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் கர்நாடகா தீவிரமாக இறங்கியுள்ளது.

''மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்'' என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது-

மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு அளித்திருக்கும் திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். பிரதமராகிய தாங்கள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு அதற்கு ஆவண செய்ய வேண்டும். இதற்கான உத்தவை மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு நீங்கள் உத்தர விட வேண்டும். 

கர்நாடகாவின் நடவடிக்கை காவிரி விவகாரத்தில் தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு எதிரானது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு போதிய தண்ணீரை கர்நாடகம் வழங்கவில்லை. 

Advertisement

மேகதாது அணை அல்லது அதனைப் போன்ற எதுவும் கர்நாடகத்தில் காவிரி ஆறு வரும் பாதையில் அமைக்கப்பட்டால், தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்படும். 

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. எனவே இந்த சூழல்களை கருத்தில் கொண்டு, மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு அளித்திருக்கும் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். 

Advertisement

இவ்வாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 
 

Advertisement