This Article is From Feb 14, 2019

இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையராக சுசில் சந்திரா நியமனம்!

இம்மாத இறுதிக்குள் மக்களவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையராக சுசில் சந்திரா நியமனம்!

ஐஐடியில் பட்டம் பெற்ற சுசில் சந்திரா, 1980ல் இந்திய வருவாய் துறையில் பணியாற்றியவர்.

New Delhi:

இந்திய தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள தேர்தல் ஆணையர் பணியிடத்துக்கு சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய நேரடி வரி விதிப்பு ஆணைய தலைவராக இருக்கும் சுஷில் சந்திரா தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் மே மாதத்தில் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் இந்த புதிய நியமனம் செய்யப்படுள்ளதாக தெரிகிறது.

இம்மாத இறுதிக்குள் மக்களவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று பேர் கொண்ட தேர்தல் ஆணையத்தில், கடந்த டிசம்பர் முதல் ஒருவருக்கான பதவி காலியாக இருந்து வந்தது. பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடத்தி வரும் நிலையில் தேர்தல் ஆணையம் கடும் பணிச்சுமையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், எதிர்கட்சிகள் வாக்கு இயந்திரத்தை பாஜகவுக்கு சாதகமாக மாற்ற முயற்சி நடப்பதாகவும், அதனால், பழைய படி வாக்குச்சீட்டு முறைக்கு தேர்தலை மாற்ற வேண்டும் என பலத்த கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும் தேர்தல் ஆணையம் அது சாத்தியமில்லை என திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

ஐஐடியில் படித்து பட்டம் பெற்றவரான சுஷில் சந்திரா, 1980ம் ஆண்டு இந்திய வருமான வரித்துறை அதிகாரியாக சேர்ந்தார். தற்போது தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக சுனில் ஆரோரா உள்ளார்.

.