Read in English
This Article is From Feb 11, 2019

மீண்டும் சிபிஐ-க்குள் குழப்பம்; நீதிமன்றத்திடம் மன்னிப்பு கேட்ட சிபிஐ இயக்குநர்!

வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்றம், ‘நாங்கள் உத்தரவு பிறப்பித்த பின்னரும் அதை மீறி நடந்து கொண்டிள்ளீர்கள். கடவுள் உங்களை காக்கட்டும்’ என்றுள்ளது. 

Advertisement
இந்தியா

இடைக்கால இயக்குநராக ராவ், நியமிக்கப்பட்ட போதே உச்ச நீதிமன்றம், ‘உங்களுக்கு இட மாறுதல் உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் இல்லை’ என்று உத்தரவிட்டிருந்தது

New Delhi:

சிபிஐ அமைப்பின் கூடுதல் இயக்குநர் நாகேஷ்வர் ராவ், புலனாய்வு அதிகாரிக்கு இடமாறுதல் உத்தரவு பிறப்பித்தது தவறுதான் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். 

பிகாரில் உள்ள ஷெல்டர்-ஹோம்களில் சிறுமிகளுக்கு எதிராக நடந்த பாலியல் வன்முறைகளை விசாரிக்க நியமிக்கப்பட்டிருந்த சிபிஐ அதிகாரி ஏ.கே.ஷர்மாவை, சிறிது காலத்துக்கு முன்னர் இடைக்கால சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்றிருந்த நாகேஷ்வர் ராவ், பணியிடம் மாற்றி உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. 

அந்த வழக்கில்தான் ராவ், ‘உச்ச நீதிமன்றத்தின் அனுமதியின்று ஏ.கே.ஷர்மாவை நான் ட்ரான்ஸ்ஃபர் செய்திருக்கக் கூடாது' என்று கூரி மன்னிப்பு கேட்டார். இடைக்கால இயக்குநராக ராவ், நியமிக்கப்பட்ட போதே உச்ச நீதிமன்றம், ‘உங்களுக்கு இட மாறுதல் உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் இல்லை' என்று உத்தரவிட்டிருந்தது. அதையும் மீறி ராவ், ஷர்மாவுக்கு இடமாறுதல் உத்தரவு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையடுத்து வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்றம், ‘நாங்கள் உத்தரவு பிறப்பித்த பின்னரும் அதை மீறி நடந்து கொண்டிள்ளீர்கள். கடவுள் உங்களை காக்கட்டும்' என்றுள்ளது. 

Advertisement

முன்னாள் சிபிஐ இயக்குநர், அலோக் வெர்மா மற்றும் மாஜி சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவருக்கும் இடையில் பனிப் போர் மூண்டதைத் தொடர்ந்து, இருவரும் பரஸ்பரம் மற்றவர் மீது லஞ்சப் புகார் சுமத்தினர். அதைத் தொடர்ந்து இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு, நாகேஷ்வர் ராவ் இடைக்கால சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டார். அவர் அஸ்தானாவுக்கு எதிராக விசாரணை செய்து வந்த அதிகாரிகளை பணியிடம் மாற்றி உத்தரவிட்டார். 

Advertisement