This Article is From Jan 15, 2019

பிரதமர் தலைமையிலான குழுவில் குழப்பம் இருந்ததா!?- சிபிஐ விவகாரம்

அலோக் வெர்மா, சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட அடுத்த நாள், தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரன்ஞன் கோகாயின் பிரதிநிதியான நீதிபதி ஏ.கே.சிக்ரி குழுவில் இடம் பெற்றிருந்தார்.

ஹைலைட்ஸ்

  • குழுவில் நீதிபதி சிக்ரி இருக்க விரும்பவில்லையாம்
  • இது குறித்து நீதிபதி சிக்ரி மற்றவர்களுக்கு கூறினாராம்
  • அலோக் வெர்மாவை நீக்குவதற்கு நீதிபதி சிக்ரி சம்மதம் தெரிவித்திருந்தார்
New Delhi:

சில நாட்களுக்கு முன்னர், சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வெர்மாவின் எதிர்காலம் குறித்து முடிவு செய்ய பிரதமர் மோடி அமைத்தக் குழுவில் அவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி மல்லிகார்ஜூனா கார்கே மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரன்ஞன் கோகாயின் பிரதிநிதியான நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இதில் கார்கே, வெர்மாவின் பணி மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஆனால் பிரதமர் மோடி மற்றும் நீதிபதி சிக்ரி, வெர்மாவை நீக்க சம்மதம் தெரிவித்தனர் என்று கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து வெர்மா, சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் இந்திய அளவில் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், நீதிபதி சிக்ரி, பிரதமர் அமைத்தக் குழுவில் இருக்க விரும்பவில்லை என்று NDTV-க்குத் தகவல் வந்துள்ளது. தன் முடிவு குறித்து நீதிபதி சிக்ரி, கார்கே மற்றும் பிரதமர் மோடியிடம் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நீதிபதி சிக்ரி வரும் மார்ச் 6 ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அவருக்கு இந்திய அரசு சார்பில் லண்டனில் இருக்கும் காமன்வெல்த் தீர்ப்பாயத்தில் பதவி வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், இந்தப் பொறுப்பு தனக்கு வேண்டாம் என்று நீதிபதி சிக்ரி முடிவெடுத்து விட்டாரம்.

அவருக்கு நெருக்கமான வட்டாரத்திடம் நாம் பேசும்போது, “சிபிஐ இயக்குநர் தொடர்பான சர்ச்சை மேலும் மேலும் பெரிதாவதை நீதிபதி சிக்ரி விரும்பவில்லை. அது முடிவுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார். இந்த விவகாரம் அவரை மிகவும் காயப்படுத்திவிட்டது. மத்திய அரசு, மிக உயரிய பொறுப்புக்கு அவர் பெயரை பரிந்துரைத்தது தான். ஆனால், அவர் அதை ஏற்க விரும்பவில்லை” என்று விளக்கியது.

நீதிபதி சிக்ரிக்கு ஓய்வுக்குப் பிறகு அளிக்கப்படும் பொறுப்பு குறித்து செய்தி வந்ததை அடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடி ஒரு போதும் நிறுத்தமாட்டார். ரஃபேல் ஊழலை மூடி மறைக்க அவர் என்ன வேண்டுமானலும் செய்வார். அவருக்கு மித மிஞ்சிய பயம் உள்ளது. அந்த பயம்தான் அவரை ஊழல்வாதியாக மாற்றியுள்ளது. அதுவே, நாட்டின் முக்கிய அமைப்புகளை வீழ்த்த அவரை முடிவெடுக்க வைக்கிறது” என்று கூறியுள்ளார்.

 

அலோக் வெர்மா, சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட அடுத்த நாள், தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

.