This Article is From Jul 02, 2020

விமான நிலைய பராமரிப்பில் முறைகேடு! GVK குழுமம் மீது சிபிஐ வழக்குப் பதிவு!!

இந்நிலையில் முறைகேடு நடைபெற்றதாக பதியப்பட்ட வழக்கில் MIAL-ன் சேர்மேனான ஜி வெங்கட கிருஷ்ண ரெட்டி பெயரும் MIAL-ன் நிர்வாக இயக்குநராக உள்ள ஜி.வி. சஞ்சய் ரெட்டியின் பெயரும் முதல் தகவல் அறிக்கையில் குற்றவாளிகளாக சிபிஐ பதிவு செய்துள்ளது.

விமான நிலைய பராமரிப்பில் முறைகேடு! GVK குழுமம் மீது சிபிஐ வழக்குப் பதிவு!!

மும்பை விமான நிலைய மோசடியில் ரூ .805 கோடி முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படுகிறது

ஹைலைட்ஸ்

  • இந்த முறைகேடான வருவாய் மதிப்பு 1,000 கோடிக்கு மேல் இருக்கும்
  • ஜி வெங்கட கிருஷ்ண ரெட்டி, ஜி வெங்கட கிருஷ்ண ரெட்டி குற்றவாளிகள் என சிபிஐ
  • இந்த முறைகேடானது 2012-2018 காலக்கட்டங்களில் செய்யப்பட்டுள்ளது
Mumbai:

நாடு முழுவதும் ஆற்றல், வளங்கள், விமான நிலையம், போக்குவரத்து, மருத்துவமனைகள் மற்றும் வாழ்க்கை அறிவியல் போன்ற துறைகளில் முதலீடு செய்து துறைசார்ந்த பணிகளை செய்து வரக்கூடிய, ஹைதராபாத்தை தலைமையகமாக கொண்ட ஜி வெங்கட கிருஷ்ண ரெட்டி(GVK) குழுமத்தின் மீது தற்போது சிபிஐ முறைகேடு வழக்கினை பதிந்துள்ளது.

முறைகேடான வழியில் 805 கோடி ரூபாயை சம்பாதித்தற்காக மும்பை சர்வதேச விமான நிலையம் லிமிடெட்டின்(MIAL) சேர்மேனான ஜி வெங்கட கிருஷ்ண ரெட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேடானது 2012-2018 காலக்கட்டங்களில் செய்யப்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.

மும்பை சர்வதேச விமான நிலையம் லிமிடெட்டை GVK குழுமம் உருவாக்கியிருந்தது. அதேபோல இந்திய விமான நிலைய ஆணையத்தின்(AAI) 50.5 சதவிகித பங்குகளையும்  GVK குழுமம் வைத்திருந்தது.

இந்நிலையில் 2006-ம் ஆண்டு இந்திய விமான நிலைய ஆணையத்திற்கும் மும்பை சர்வதேச விமான நிலையம் லிமிடெட்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. இதில் விமான நிலையத்தின் நவீனமயமாக்கல், செயல்பாடு மற்றும் பராமரிப்பு போன்றவற்றிற்காக மும்பை சர்வதேச விமான நிலையம் லிமிடெட் வருவாயில் இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு 38.7 சதவீதத்தை வருடாந்திர கட்டணமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் முறைகேடு நடைபெற்றதாக பதியப்பட்ட வழக்கில் MIAL-ன் சேர்மேனான ஜி வெங்கட கிருஷ்ண ரெட்டி பெயரும் MIAL-ன் நிர்வாக இயக்குநராக உள்ள ஜி.வி. சஞ்சய் ரெட்டியின் பெயரும் முதல் தகவல் அறிக்கையில் குற்றவாளிகளாக சிபிஐ பதிவு செய்துள்ளது.

பிரதான விசாரணை நிறுவனமானது, “மற்ற ஒன்பது தனியார் நிறுவனங்களுடன் போலி வேலை ஒப்பந்தங்களை நிறைவேற்றியதன் மூலமாக 310 கோடி ரூபாயை பறித்ததாகவும், இவற்றில் பெரும்பாலானவை 2017-18க்கு இடையில் மும்பை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள 200 ஏக்கர் வளர்ச்சியடையாத நிலப் பரப்பில் ரியல் எஸ்டேட் மேம்பாடு எனக்கூறி ஏமாற்றியதாகவும்“ குற்றம் சாட்டியுள்ளது. மேலும்,

" AAI க்கு இழப்பை ஏற்படுத்தும் குற்றவியல் நோக்கத்துடன் ஜி.வி.கே குழும நிறுவனங்களின் விளம்பரதாரர்கள், MIAL-ன் உபரி நிதி 395 கோடி ரூபாயை 2012 மற்றும் 2018 க்கு இடையில் தங்கள் மற்ற குழு நிறுவனங்களுக்கு நிதியளிக்க பயன்படுத்தினர்" என்றும் அந்த நிறுவனம் குற்றம் சாட்டியது.

" MIAL-வில் உள்ள ஜி.வி.கே குழும நிறுவனங்களின் விளம்பரதாரர்கள், MIAL-ன் செலவினங்களை உயர்த்துவதன் மூலம் கூட்டு நிறுவன நிறுவனத்தின் 100 கோடிக்கும் அதிகமான தொகையை மோசடி செய்துள்ளனர்" என்று எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக ஜி.வி.கே குழுமம் 805 கோடி ரூபாயை முறைகேடாக ஈட்டியுள்ளதாக தெரிகிறது. ஆனால், உண்மையில் இந்த முறைகேடான வருவாய் மதிப்பு 1,000 கோடிக்கு மேல் இருக்கும் ”என்று சிபிஐ வட்டாரங்கள் என்டிடிவிக்கு தெரிவித்தன.

.