This Article is From Jun 25, 2018

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு கொடுக்கப்பட்ட பிணைக்கு எதிராக சிபிஐ மனு!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு கொடுக்கப்பட்ட பிணைக்கு எதிராக சிபிஐ, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

கார்த்தி சிதம்பரம்

ஹைலைட்ஸ்

  • கார்த்தி சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டது
  • இதை எதிர்த்து சிபிஐ மனுத் தாக்கல் செய்துள்ளது
  • அரசியல் காரணங்களுக்காக குறிவைக்கப்படுகிறேன், கார்த்தி
New Delhi: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு கொடுக்கப்பட்ட பிணைக்கு எதிராக சிபிஐ, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு, சட்டத்துக்குப் புறம்பாக 300 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு பெற்றுத் தந்ததாக கார்த்தி சிதம்பரத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அப்போது, ஐ.என்.எக்ஸ் மீடியாவின் இயக்குநர்களாக இருந்தவர்கள் பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜி. 300 கோடி ரூபாய் பணத்தைப் பெற்றுத் தர அப்போது, மத்திய அரசில் அமைச்சராக அங்கம் வகித்த தனது தந்தையான ப.சிதம்ரத்தின் செல்வாக்கை கார்த்தி, பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜி, கார்த்தி சிதம்பரம் மற்றும் பி.சிதம்பரம் ஆகியோர் தங்களிடம் லஞ்சம் பெற்றதாக குற்றம் கூறிய பின்னர், கார்த்தி கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். 

இதற்கு எதிராக தற்போது உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது சிபிஐ. ‘ஒரு கீழ் நீதிமன்றத்தில் பிணை கொடுப்பதற்கான வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, அதற்கு மேல் இருக்கும் நீதிமன்றம் ஜாமின் கொடுப்பது நடைமுறையல்ல’ என்று மனுவில் சிபிஐ கூறியுள்ளது.

கார்த்தி சிதம்பரம், ‘ஒரு அரசியல்வாதியின் மகன் என்பதால், என் மீது தவறான குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர்’ என்று மொத்த விவகாரம் குறித்து கருத்து கூறியுள்ளார். 
.